பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 65 என்ற இன்னொரு பாசுரத்திலும் இந்த மூன்று நிலைகளிலும் எம்பெருமானை அநுபவித்து மகிழ்ந்துள்ளனர். 7. வரகுண மங்கை : இத்தலம் தண்பொருநை யாற்றின் வடகரையில் உள்ளது. இங்கு வந்து புளிங்குடிக் கிடந்து (திருவாய், 9.2 : 4) என்ற திருவாய்மொழியை ஒதிச் சேவிக்கின்றோம். தனிப்பதிகமோ பாசுரமோ இல்லை. "வரகுணமங்கை இருந்து’ என்ற தொடர் மட்டிலுமே இந்த எம்பெருமானுக்கு உரியது. இந்தப் பாசுரமும் புளிங்குடிப் பெருமானுக்கு உரியது. புளிங்குடிப் பெருமானை மங்களா சாசனம் செய்யும் பொழுதே வரகுண மங்கை எம்பெரு மானும் வைகுந்த நாதனும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து இப்பாசுரத்தால் மங்களாசாசனம் பெறுகின்றனர்! 8. திருக்குளந்தை (பெருங்குளம்) : திருக்கோயில் ஊரின் மேற்குப் பக்கத்திலுள்ளது. நம்மாழ்வார் மட்டிலும் 14. வரகுண மங்கை : சிரீவைகுண்டத்திற்குக் கிழக்கே 2 கல் தொலைவு. தூத்துக்குடி செல்லும் சான்லயில் உள்ளது. சீவைகுண்டத்திலிருந்து குதிரை வண்டி களும் மாட்டு வண்டிகளும் கிடைக்கும். இத்திருத் தலத்தின் அர்ச்சகர் சீவைகுண்டத்திலிருந்து வர வேண்டும் . திருத்தலப் பயணிகளே அவரை இட்டுக் கொண்டு வருதல் சிறப்பு, எம்பெருமான்: விஜயாசனர். தாயார் : வரகுணவல்லி, கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் இருந்த திருக்கேர்லம். 15. திருக்குளங்தை : சிரீவைகுண்டத்திலிருந்து வட கிழக்கில் சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது. சிரீவைகுண்டம்-ஏரல் பேருந்து வழியில் உள்ளது. இங்குக் குதிரை வண்டிகளும் மாட்டுவண்டிகளும் குறைவில்லை. தங்கும் விடுதிகளும் உணவு விடுதி களும் உள்ளன. இத்தலத்திலிருந்து தண் பொரு நையாறு 1க்கி.மீ. தொலைவில் ஒடுகின்றது. இங்குள்ள ஒரு பெரிய ஏரியின் காரணமாக இவ்வூர் “பெருங்குளம்’ என்ற பெயராலும் வழங்கி அருகின்றது. எ ம் பெ ரு ம | ன் மாயக்கத்தன். தாயார்: குளந்தை வல்வி நாச்சியார். நின்ற திருக் கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், இ)ை