பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்ண்டிநாட்டுத் திருப்பதிகள் 71 இட்ம் கண்ணாற் காண இனிதாயிருப்பதே பிரயோஜநம் இஃது அநந்யப் ப்ரயோஜநத்திற்கு விரோதியன்று என்பதாம். 'உன் தாமரைக் கண்களால் கோக்காய் : சொல்லில் தோற்றாத பற்றும் நோக்கிலே தெரியும்படிக் குளிர நோக்கி யருள வேண்டும் என்பது இதன் பொருள். இத்தொடர் பற்றிய ஒர் இதிகாசத்தை ஈட்டாசிரியர் குறிப்பிடுகின்றார். திருவரங்கத்தில் பிள்ளை தேவப்பெருமாள் அரையர் என்பார் இப்பாசுரத்தைச் சேவிக்கையில் "உன் தாமரைக் கண்களால் நோக்காய் என்று ஒரு தடவை சொல்வி நிறுத்தாமல் நோக்காய் நோக்காய்.” என்று பல காலம் சொல்லிக் கொண்டேயிருந்து மேலடியில் போகமாட்டாது நின்றாராம். அப்பொழுது கேட்டிருப்போர் கூட்டத்தில் வீற்றிருந்த அவருடைய திருத்தகப்பனார் ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் எழுந்திருந்து பிள்ளாய் நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்பட இங்ங்ணம் பலகாலும் சொல்லி வலியுறுத்தலாமோ? அழகிய மிடற்றைத் தந்து, நல்ல பாட்டைத் தந்து, ஐசுவரிய சந்தானங்களையும் அவர் தந்தருளியிருக்க, ஒன்றும் செய்யாதாராக நினைத்து இன்ன மும் நோக்காய் நோக்காய்... என்றால் இஃது என்னே! மேலே பாடுக என்றாராம்." T20. இப்பதிகத்தின் பொருட்சுவை ஒரு புறம் இருக்க, - சொற்சுவை கல் நெஞ்சத்தையும் கரையப் பண்ணும். சம்சாரத்தில் ஆர்த்தி விசேடங்கள் உண்டாகி நெஞ்சு தடுமாறிக் கிடக்கும்போது இப் பதிகத்தின் பாசுரங்களை வாய்வெருவினால் நெஞ்சுகுளிரும்’ என்று கூறி, மேலும் நாற்பதாண்டு களுக்குள் திருவரங்கம் பெரிய கோயிலில் பெரிய திருவத்யயன உற்சவத்தில் என்னுடைய ஆசார்ய ரான அழகிய மணவாளச்சீயர் கண்ணும் கண்ணிரு ழாயிருந்த இருப்பு நின்று நோன்றிக் கண்ணும் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே (திருவாய் 5.5 3) என்று உரைப்பர் பி.மு. அண்ணங்கராசாரிய சுவாமி கள் (திவ்யார்த்த தீபிகை காண்க.)