பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சடகோபன் செந்தமிழ் 10. தொலைவிலிமங்கலம்’ இத் தி ரு த் த லத் து எம்பெருமானை ஆழ்வார் ஒரு திருவாய்மொழியால் (5.5) மங்களாசாசனம் செய்கின்றார். இப்பதிகம் நாயகி நிலையில் தோழிப் பாசுரமாக நடைபெறுகின்றது. பராங்குசநாயகி பிறந்தபொழுது இவரது திருத்தாயார் முதலானோர் சோதிடர்களை அழைத்து இக்குழந்தையின் பேற்றுச் சிறப்பு களைப்பற்றி உசாவுகின்றனர். "இவன் வாழ்வு மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளது. இவள் உயர்வற உயர்நல முடையவனான அயர்வறும் அமரர்கள் அதிபதியால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவள்; தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல்மாலைகள்' சொல்லுவள்என்றெல்லாம் சொல்லுகின்றனர். அதன் பிறகு 'ஆனால் இவளுக்கு ஓர் 21. தொலைவிலி மங்கலம் (இரட்டைத் திருப்பதிகள்) இங்கு இரண்டு திருப்பதிகள் உள்ளன. ஆகவே இவை இரட்டைத் திருப்பதிகள் என்று பெயர் பெற்றன. ஒன்று தண் பொருநையாற்றின் வடகரை யில் ஆற்றுப்படுகையில் உள்ளது. (இறைவன் - சீநிவாசன்); மற்றொன்று இதற்குச் சற்று வடபுறம் இருப்பது (இறைவன் - செந்தாமரைக் கண்ணன்), இவை இரட்டைத் திருப்பதிகளாக இருப்பினும் 108 திருப்பதிக் கணக்கில் ஒன்றாகவே கருதப்பெறு கின்றது. ஆழ்வார் திருநகரி இருப்பூர்தி நிலையத்தி விருந்து 2 கல் தொலைவு; நிலையத்திற்குக் கிழக்கே உள்ளது. இத்திருக்கோயிலின் அர்ச்சகர் அடுத்த கரையிலுள்ள தென்திருப்பேரையிலிருத்து வருதல் வேண்டும். இறைவன்: தேவபிரான், அரவிந்த லோசனன், தாயார் கருந்தடங்கண்ணி நாச்சியார். நின்ற, இருந்த திருக்கோலங்கள். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், இந்த இரண்டு திருக்கோயில் களைத் தவிர வேறு கட்டடங்கள் அருகில் உள்ளன. இந்தச் சிற்றுார்_ செளரமங்கலம் என்ற பெயரால் வழங்கி வருகின்றது. இத்திருக்கோயிலின் மேல்திசையில் ஒரு _ கல் தொலைவில் அப்பன் சங்கிதி உள்ளது. இது நம்மாழ்வார் அவதரித்த தலம் என்று சொல்லப்பெறுகின்இது