பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சடகோபன் செந்தமிழ் என்பது வரலாறு. இத்திருக்கோயிலின் கொடிமரம் சந்நிதிக்கு நேராக இல்லை. சற்று வடபுமறாக விலகியுள்ளது. காரணம்; நம்பாடுவான் என்ற பக்தனுக்காகத்தான் அப்படி விலகியுள்ளது. இவன் திருக்குறுங்குடியை அடுத்துள்ள மயேந்திரகிரியில் யாழ்வாசிப்பவர்களில் வல்ல பாணர்களுள் ஒருவன். இவன் திருக்குறுங்குடி நம்பியைச் சேவிக்க வருகின்றான். அவன் வந்த நாள் கார்த்திகை மாதம் சுக்கில பட்ச ஏகாதசி. அவன் வரும் வழியில் பசியுடனிருந்த பிரம்ம இராட்சசன் ஒருவன் இவனைப் பற்றிப்பசி தீர்த்துக் கொள்ள எண்ணுகின்றான். நம்பியைச் சேவித்த பிறகு தான் வந்து இராக்கதனுக்கு இரையாவதாகப் பாணன் கூற, இராக்கதன் அவன் பேச்சை நம்பி அவனை விடுவிக்கின்றான். பாணன் நம்பியைச் சேவிக்கின்றபோது கோயிலின் கொடிமரம் சந்நிதியை மறைக்கின்றது. பாணன் அதனைப் பொருட் படுத்தாமல் உள்ளம் உருக உடல்புளகிக்கப் பாடுகின்றான். கம்பியின் அருளால் கொடிமரம் நகர்கின்றது. சேரமாதேவியிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு. இது வாம்ன கேத்திரமானதால் குறுங்குடி என்ற பெயர் பெற்றது . எம் பெருமான்: வைணவ நம்பி, மலைமேல் தம்பி, நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருக்குறுங்குடி நம்பி (7 நம்பிகள்). தாயார்: குறுங்குடி வல்லி நாச்சியார். நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். இத்தலத்து எம்பெருமான் திருவருளால்தான் நம்மாழ்வார் அவதரித்தார். திருமங்கை யாழ்வார் முத்திபெற்ற தலம். நம்மாழ்வார், திருமழிசையாழ்வர், பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற திருத்தலம். 25. முன்னர் விளக்கப்பெற்றது. முதல் கட்டுரை-பக்.5 、S。 26. கம்பி; நம்பு என்பது விருப்பம் என்றும் பொருள் தரும் ஓர் உரிச்சொல். அதன் பகுதியாக வந்தது