பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சடகோபன் செந்தமிழ் திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகைச் சீறுங்கள். என்னைச் சீறுவது முறைமையன்று. திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட அக்கணமே சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண் களும் செங்கனிவாயும் என் முன்னே தோன்றுகின்றன (1). மேகத்தில் மின்னல் தோன்றினாப் போலேயிருக்கும் அவனது பூணு நூலும், பரந்த மின்னல் ஓரிடத்திலே சுழித்தாற் போன்றே மகரகுண்டலமும், திருமறுவும், திருவாபரணங் களும், திருத்தோள்களும் என்னைச் சுற்றி வளைத்துக் கொள்ளுகின்றன (2}. அவனது வென்றிவில், கதை, வாள், திருவாழி, திருச்சங்கு, ஆகிய பஞ்சாயுதங்களும் என்னைச் சூழ்ந்து கிடக்கின்றன (3). அவனது செவ்வித் திருத்துழாய்த் தனி மாலையும், உபய விபூதிக்கும் தான் நாதன் என்பதனை நிலைநாட்டும் திருவ பிடேகமும், அந்த மாலைக்கும் திரு முடிக்கும் பாங்கான திருமேனியும், திருவரை பூத்தாற் போன்று தோற்றுகின்ற திருப்பீதாம்பரமும் அதன் மேலா பரணமான விடு நானும் இடைவிடாது என் அருகே நின்று ஒளிருகின்றன (4). அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவு கொண்டாற் போன்றதான திருப்பவளமும் அழகியவாய் நீண்டு விளங்குகின்ற திருப்புருவங்களும், அவற்றிற்குத் தகுதி யாகத் திகழ்கின்ற திருக்கண்களும் என் உயிர் நிலையிலே நின்று என்னை நவிகின்றன (5), கற்பகக் கொடி போன்ற அவனது திருமூக்கும், கொவ்வைச் செவ்வாயும், நீலமேகம் போன்ற திருமேனியும், நான்கு திருத்தோள்களும் என் நெஞ்சை இடம் அடைத்துக் கொண்டு கிடக்கின்றனவே (6). சோதி வெள்ளம் அலையெறியும் திருமேனியுடன் என் உள்ளத்தில் வேர் கொண்டு விட்டான் (7), செய்யதாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடை யும்வடிவும் மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவிய்ேன் முன்னிற்குமே” 'அல்குல் - இடைக்குக் கீழுள்ள பின் பகுதி: மொய்ய - செறிந்து நீண்ட குழல் கேசம்)