பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 83 வருவார் செல்வார் வண்பரி சாரத்து இருந்தனன் திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்வார்; செய்வது என்? உருவார் சக்கரம் சங்குசுமக்(து) இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வார் ஓர் அடி யானும் உளன் என்றே: ாறு *-SGarు 83.7 (திருவாழ்மார்பன் . சீநிவாசன்; என் திறம் என் தன்மை; பாடு பக்கம்; உழல்வான் - திரிகின் றவன்). . என்பது பாசுரம். எம்பெருமான் திருவண் பரிசாரத்தில் வந்து எழுந்தருளியிருக்கின்றார். திருநகரியில் திருப்புளி யாழ்வார் அடியில் எழுந்தருளியிருக்கின்றார் நம்மாழ்வார். சக்கரத்தாழ்வாரையும் சங்காழ்வாரையும் எம்பெருமான் சுமந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றார். எம்பெருமா னுக்கு உபய விபூதியும் ஆளாயிருந்தும் ஒரு சேவகனைத் தன்னிடம் வேலைக்கு வைத்துக் கொள்ளவில்லையே என்று வயிறு பிடிக்கின்றார். "ஆள் இருந்தால் திருவாழி திருச் சங்குகளைத் தாமே சுமப்பாரோ? மடாதிபதிகள் தம் முடைய திரிதண்டத்தையும் ஓர் அடியாரிடம் கொடுத்து முக்கால் கல் தொலைவு நடந்து சென்று ஊரை அடையலாம். நாகர்கோயிவில் தங்கி நகர்ப் பேருந்துமூலம் இவ்வூருக்கு வருவதே சிறந்தது. நாகர்கோவிலில் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் வசதியாக உள்ளன. வசதியாகத் தங்கலாம். திருவண்பரிசாரம் நம்மாழ்வாரின் திருத்தாயார் உடைய கங்கையார் பிறந்த ஊர். இந்த ஊர் எம்பெருமானும் அந்த அம்மையாருக்குக் காட்சி தந்ததாகப் புராண வரலாறு கூறுகின்றது.