பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சடகோபன் செந்தமிழ் என்று அறிமுகம் செய்து வைக்கின்றார். அலர்மேல் மங்கை உறைமார்பன் வாழும் இடம் திருவாட்டாறு என்பது ஆழ்வாருடைய குறிப்பு. திருவாட்டாற்றான் மீதுள்ள திருவாய்மொழி மிகமிக அற்புதமானது. பன்முறை படித்துப் படித்து மனம் கரைய வேண்டிய பதிகமாகும் இது (10.6). சீவான்மா வேட்டையில் சதா ஈடுபட்டுள்ள எம்பெருமான் திருவாட்டாற்றில் வந்து பாடிவீடு அமைத்துக் கொண்டு தங்கு கின்றான். ஆழ்வாரைத் திருநாட்டில் கொண்டு போய் அநுபவிக்க வேண்டுமென்று பாரித்து நிற்கின்றான். மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்துஇன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே --திருவாய் 10, 6 : 3 என்ற ஆழ்வாருடைய பாசுரத்தாலேயே இதனை அறியலாம். இதனை உளங்கொண்டுதான் ஈட்டின் ஆசிரியர் நம்பிள்ளை இப்பதிகத்தின் அவதாரிகை (முன்னுரை) தொடங்கும் போதே பொய் நின்ற ஞாலம் (திருவிருத் 1) தொடங்கி இவ்வளவும் வரை (திருவாய். 10.6) ஈசுவரனை ஆழ்வார் பின் தொடர்ந்தபடி சொல்லிற்று; இது தொடங்கி ஆழ்வாரை சர்வேசுவரன் பின்தொடருகின்றபடி சொல்லுகிறது” என்று கூறியுள்ளார். அஃதாவது, இதுகாறும் ஆழ்வார் எம்பெருமானிடம் குறையிரந்து நின்றார்; இனி முனியே நான் முகனே (திருவாய் 10.10) என்னும் திருவாய்மொழி யாவும் எம்பெருமான் ஆழ்வாரிடம் குறையிரந்து நிற்கிற படியைப் பேசத் தொடங்குகின்றது என்பதாம். இது கருதியே திவ்விய தேசங்கள் தோறும் எழுந்தருளியுள்ள எம்பெருமான் களின் குணங்களைக் குறிப்பிடுங்கால் ஆசாரிய ஹிருதயம்' தி ரு வாட் டா ற் று எம்பெருமானிடம் "அடியார்க்கு மோட்சத்தைக் கொடுக்கும் அளவில் அவர்கள் விதித்தபடி