பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் . - 89 களைச் சொன்ன அளவிலே இடர் என்று பேர் பெற்றவை எல்லாம் கெடும். 'போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் (திருப். 15) என்று ஆண்டாள் கூறியவாறு ஆகாயியமும்(எதிர்வினை) சஞ்சிதமும் (பழவினை) நெருப்பி விட்ட பஞ்சுபோல் நசித்துப் போய்விடும். அவன் ஒரு விரோதியைப் போக்கினபடி சொல்ல, விரோதி என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்" என்பது ஈடு (10.2 : 1): கேசவன் நாமத்தை வாய்விட்டுச் சொல்வதே கேசவனை அருச்சித்ததாகும் என்பது ஆழ்வாருடைய திருவுள்ளம். இந்த உலகில் தீச்செயலை மேற்கொள்ள நினைப்பவர் சிறிதும் தாமதியாது உடனே செய்து முடிப்பதும், நற்செயல் மேற்கொள்ள நினைப்பவர் பார்ப்போம் பார்ப்போம்" என்று காலத்தை நீட்டிக் கொண்டு போவதும் இயல்பாக இருப்பதை இன்றும் நாம் காணலாம். அனந்தபுரம் போக வேண்டும் என்ற நினைப்புத் தோன்றிய அன்றே போக வேண்டும் என்பது ஆழ்வாருடைய விருப்பம், ஆகவேதான் "புகுதும் என்று கூறினார். அப்படி உடனே புறப்பட்டு விட்டால், இப்பிறப்பில் மட்டுமல்ல, இன்னும் வருகின்ற ஏழு பிறப்பில் நேரிடும் துன்பங்களும், கடந்த ஏழு பிறப்பில் செய்த தீவினைகளும் போய்விடும் (2). துக்கங்களும் தக்கத் திற்குக் காரணமானவைகளும் அழியும்; இதை அநுபவத்தில் கண்ட ஆழ்வார் இந்த இயல்பினை அறியாத ஏனையோருக் கும் நெஞ்சில் படும்படி உரைக்கின்றார். அவனுடைய ஆயிரம் பெயர்களில் ஒன்றைச் சொன்னால் கூட போதும் என்கின்றார். பேரும் ஒர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசுமினே'(3). அந்தப் பெயரையும் கூசாமல் பேசினால், ஒரு திருநாமம் ஆயிரம் என்று பெருகிச் செயல் புரியும் பெருமையுடையது. அவர் இருக்கும் அந்த ஊரும் பரமபதமாகிவிடும்.(4). இதன்ை வற்புறுத்துவார் போல் அண்ணலார் கமலபாதம்