பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - சடகோபன் செந்தமிழ் அணுகுவார் அமரர் ஆவார் என்கின்றார். எண்ணுமின் எந்தை நாமம் என்பதற்கு ஈடு : “ இடறினவன் அம்மே” என்னுமாறு போல, திருநாமம் சொல்லுவதற்கு ஒரு தகுதியைத் தேடிக்கொள்ள வேண்டா. திருநாமம் சொல்லும் போது பக்தியுடையவனாகிச் சொல்ல வேண்டுமோ?’ என்று தஞ்சியர் பட்டரைக் கேட்க, அதற்கு அவர் கங்கையில் முழுகப் போகிறவனுக்கு வேறு ஓர் உவர்க் குழியிலே முழுகிப் போக வேண்டுமோ? மேல் உண்டாகின்ற நன்மையைத் தரும் இது தகுதியையும் தரமாட்டாதோ? என்று அருளிச் செய்தாராம். திருநாமம் சொல்லுவதற்கு ருசியே'. ஆயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள்'. இப்பகுதி நன்கு சுவைக்கத் தக்கது." மேற்குறிப்பிட்ட மூன்று திவ்விய தேசங் களும் ஒரே தடவையில் சேவிக்க வேண்டும். அடுத்து வரும் ஆறையும் (4,5,6,7,8.9) ஒரு மூச்சில் சேவிக்க வேண்டும். 4. திருவாறன்விளை" : ஆழ்வார்கள் வழுவிலா" அடிமை செய்ய வேண்டும் என்று அது தன்னையே சொல்லா


سمته تاس--

4. ருசி-பாவச் செயலையோ புண்ணியச் செயலையோ ஆதித்தே செய்வதற்குக் கார்ணமாயுள்ள சுவை. 5. 'இது விளக்கம் மலைநாட்டுத் திருப்பதிகள் (கட்டுரை-3) கண்டு தெளிக. 9. திருவாறன்விளை இத்திவ்வியதேசம் கேரள ஆாழிலத்தில் எர்ணாகுள் கொல்லிம் இருப்பூதி வழியில் செங்கன்று என்ற நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு. ஆரமுல்லா என்பது வழிக்கிலுள்ள பெயர், நம்மாழ்வார் மட்டிலும் மங்களாசாசனம் செய்த திருத்தலம். திருவாட் -ாற்றுத் திருக்கோயில்போல் சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் நாறபுறமும் உயர்ந்த மதில்கள், சுமார் ஐந்து ಹಹ್ಲಿ நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது, இருக்கோயிலை வலம் வருவதற்கு கற்கள் பரப்ப் பெற்ற நடைபாதை அமைந்துள்ளத் திருக்கோயி லின் வடபுறம் சான்றோர் கவி எனக் கிடக்கும்’