பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 93 யின் புகழைப் பாடுவதால் ஏற்படும்பலன்: 'பாபம் போகைக் காகத் தனித்து ஒரு முயற்சி செய்ய வேண்டா, பால் குடிக்க நோய்தீருமாறு போலே நம்முடையபாபங்கள்தாமே நசித்துப் போம்" (ஈடு 7,10,5) 5. திருச்செங்குன்றுார் : நம்மாழ்வார் மட்டிலும் ஒரு திருவாய்மொழியில் (வார் கடா அருவி 8.4) மங்களா சாசனம் செய்யப் பெற்ற திவ்வியதேசம் இது . வார்கடா அருவி யானைமா மலையின் மருப்பினைக் குவடுஇறுத்து உருட்டி ஊர்கொள் திண்பாகன் உயிர்செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல் போர்கொடா அரசர் புறக்கிட மாடம் மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த சீர்கொன் சிற் றாயன் திருச்செங்குன்று ரீல் திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே (1) (வார்கடா-ஒழுகுகின்ற மதம்: மருப்பு-கொம்பு; குவடுசிகரம்; ஊர் கொள்-நடத்தவல்ல; செகுத்துமுடித்து:போர் கொடா-போரைச் செலுத்துகின்ற: சிற்றாயன்.பால கிருட்டிணன்; சார்வு-புகலிடம்) 8. திருச்செங்குன்றும் கொல்லம்-எர்ணா குளம் இருப்பூர்தி வழியில் ஒரு நிலையம். நிலையத்தி விருந்து திருக்கோயில் சுமார் ஒரு கி மீ. தொலைவில் உள்ளது. நடந்தே செல்லலாம். எம்பெருமான் : இமையவர் அப்பன். தாயார், செங்கமளவல்லி. மேற்கே திருமுக மண்டலம். நின்ற திருக்கோலம். முதல் தடவை. சென்றபோது (1969 ஜூன்) முன் வாயில் நாற்புற மதிள்சுவர்கள் கட்டப் பெறாத நிலையில் இடிந்து பாழடைந்த நிலையில் . இருந்தது. இரண்டாம் முறை சென்றபோது (1983மே மாதம்) திருப்பணி முடிந்து நன்னிலையில் இருந்தது திருக்கோயில்: -