பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 சடகோபன் செந்தமிழ் என்பது முதற்பாசுரம், இதில் சிறுவன் கண்ணனின் தீரச் செயல் குறிக்கப்பெறுகின்றது. கண்ணன் பிறந்த பொழு திருந்தே அவனைக் கொல்லக் கம்சன் பல்வேறு வழிகளை மேற் கொள்ளுகின்றான். வில்விழவு ஒன்று ஏற்படுத்தி அதனைக் காரணமாகக் கொண்டு அக்ருரனை அனுப்பிக் கண்ணனைத் திருவாய்ப்பாடியினின்றும் மதுரைக்கு வர வழைக்கின்றான். கண்ணனும் பலராமனும் மதுரையை நோக்கி வருகின்றனர். வழியில் கண்ணனைக் கொல்வதற் கென்றே குவலயா பீடம் என்ற யானை மதுவூட்டி நிறுத்தப் பெற்றுள்ளது. முதலில் கண்ணனால் அந்த யானையின் உயிர் செகுக்கப்பெறுகின்றது. மலையின்மீதுள்ள இரண்டு கொடு முடிகளைத் தகர்ப்பது போல் கண்ணன் அந்த யானை யின் கொம்புகளைப் பிடுங்கி யானையைக் கொன்று அதன் மீது இவர்ந்திருக்கும் பாகனையும் யமபுரத்திற்கு அனுப்பு கின்றான். அரண்மனை வாயிலைக் குறுகும்பொழுது சானூரன், முஷ்டிகன் என்ற இரண்டு மல்லர்கள் சிறுவர் களை எதிக்கின்றனர். கண்ணன் அந்த இரண்டு மல்லர்களை யும் தொலைத் தொழிக்கின்றான். அத்தாணி மண்டபத்தினுள்ளே துழைந்தவுடன் கம்சனைச் சூழ்ந்து போர்க் கோலத்துடன் இருந்த அரசர் களைப் புற முது கி ட் ே டா டச் செய்து அரியாசனத் தி ரு ந் த கம்சனின் உயிரையும் போக்குகின்றான். இத்தனைச் செயல்களையும் ஒருசேர முடித்த கண்ணன் திருச்செங்குன்றுார்த் திருக்கோயிலில் அர்ச்சை வடிவமாக எழுந்தருளியுள்ளான். அந்தத் திருப்பதியே தனக்குப் புகலிட மாகும் என்று திருவுள்ளமாகின்றார் மேற்குறிப்பிட்ட பாசுரத்தில். யானையைக் கொன்ற சிறுவன் கண்ணனின் தீரச் செயலை நினைந்து, - - இம்பமிகு மதயானை மருப்பொசித்து கஞ்சன் குஞ்சிபிடித் தடித்தபிரான்-பெரி.தி. 3.10.3