பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 95 என்று பெருமிதங் கொண்டு பேசுவர் திருமங்கை மன்னன். மேற்குறிப்பிட்ட நம்மாழ்வாரின் பாசுரத்தை நினைந்தே ஆசாரிய ஹிருதயம் இந்தத் திவ்வியதேசத்தில் சூரம், வீரம் முதலிய குணங்கள் விளங்கும் என்கின்றார். - மகாமதிகள் அச்சங்கெட்டு அமரும் செளர்யாதிகள், சிற்றாற்றிலே கொழிக்கும் ஆசா-ஹிரு 74 என்பது குத்திரம். மகாமதிகள்-விதுரன் போன்றவர்கள்; செளர்யம்-சூரனது தன்மை. குவலயா பீடம், சானுர்ரன், முஷ்டிகன், கம்சன் முதலானவர்களைக் கொன்று வெளிப் படுத்திய சூரத்தனம் முதலானவைகள், இந்தத் திவ்விய தேசத்தில் ஆற்றுக்குள்ளிருக்கும் மணி, முத்து முதலானவை கள் கரையிலே கொழித்துத் தோற்றுமாறுபோலே இவை பிர காசிக்கும் என்பது கருத்து. இந்த எம்பெருமான் அர்ச்சை வடி விலேயே தம் இதய கமலத்தில் வீற்றிருப்பதாகக் கூறுவர் {7}. இந்தத் தலத்தின் எம்பெருமானின் திருநாமம் இமையவன் அப்பன் என்பதை, - - எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் (2) என்ற பாசுரப் பகுதியால் அறிகிறோம்.” 6. திருக்கடித்தானம் : பூத்த பொழில்தண் திருக் கடித்தானம் (8.6:6) என்று புகழ்கின்றார் நம்மாழ்வார் இத் திருப்பதியை. மணத்தையுடைய இடம் எனப் பொருள்படும் திருக்கடித்தானம்' என்ற திருப்பெயர் இவ்வூருக்கு மிகவும் 9. மேலும் இத்தலத்து எம்பெருமானை. ஆழ்வார் அநுபவித்த்தை மலைநாட்டுத் திருப்பதிகள் (கட்டுரை.5) காண்க. - 10. திருக்கடித்தானம்_: கொல்லம்-எர்ணாக் குளம் இருப்பூர்தி வழியில் செங்கனாச்சேரி என்