பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சடகோபன்செந்தமிழ் பொருத்தும். கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே! (8.6:10) என்ற நம்மாழ்வார் கூற்று சிந்திக்கத் தக்கது. ೮ கள் செறிந்து குளிர்ச்சியை உண்டாக்குவதால் G,ಹಮಿಹಿ நாட்டிலுள்ள கற்பகச் சோலையை நினைவுகூரும் படி செய் கின்றது. திருக்கடித்தானத்தைக் கற்பகச் சோலையுடன் ஒப்பநோக்கும்படியும் தூண்டுகின்றது. நம்மாழ்வார் மட்டி லும் ஒரே திருவாய் மொழியில் (8.6) மங்களாசாசனம்செய்த திவ்வியதேசம். இந்தத் திவ்விய தேசத்தில் நம்மாழ்வார் பெற்ற இறையதுபவத்தை நாமும் பெற முயல்கின்றோம். . எம்பெருமான் இரவு பகலென்று பாராமல் தன்னையே நினைந்து வாழுமாறு ஆழ்வாருக்குத் திருவருளைச் சுரந் தான்; அந்தப் பேரருளை எண்ணி எண்ணி இனியராகின்றார் ஆழ்வார். எல்லியும் காலையும் தன்னை கினைந்துஎழ நல்ல அருள்கள் நமக்கேதந்து அருள் செய்வான் (1) (எல் வி.இரவு; அருள்-கிருபை) என்பது அவரது திருவாக்கு. ‘நமக்கே தந்து அருள்செய்வான்' என்பதால் எம்பெருமான் வேறொருவருக்கும் இவ்வருள் பாவிக்கவில்லை என்பது ஆழ்வாரின் நினைப்பு. தரம் பெற்ற பேற்றினை நித்திய சூரிகளும் பெறவில்லை என்பதாக எண்ணுகின்றார். நிலையத்துலிருந்து சுமார் 2 கல் தொலைவில் உள்ளது. பேருந்து மூலம் இவ்வூரை அடையலாம். கோடைக் காலமாக இருப்பினும் தோப்பும் துரவு மாக உள்ள இடமாதலால் இயற்கைக் காட்சிகளை கண்டு களித்தவண்ணம் நடந்து செல்வது சிறப்பு. சுமார் 1 மணி நேரத்தில் இவ்வூரை அடையலாம். எம்பெருமான் அற்புத நாராயணன், அமிர்த நாராயணன், தாயார் : கற்பகவல்லி, நின்ற திருக் கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்,