பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் - 97 அடுத்து, அந்த அருள் எங்ஙனம் பாலிக்கப்பெற்றது என்பதைச் சொல்லப் புகுகின்றார். இதனை, திருக்கடித் தானமும் என்னுடைச் சிங்தையும் ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டிர் (2) (ஒருங்க அடுத்து-ஒருக்கடுத்து: ஒன்றாக நினைத்து என் படி; உறையும்-வதியும்) -- * என்ற பாசுரத்தால் அருள்கின்றார். திருக்கடித்தானம் என்ற திருப்பதியையும் தன்னுடைய சிந்தையையும் ஒன்றாக நினைப்பதைப்பற்றி, - அங்குத்தை வாலம் சாதனம் இங்குத்தை வாஸம் சாத்தியம் - - ரீவசன. பூஷ. 171 (அங்குத்தை அந்த இடத்தில், இங்குத்தை.இந்த இடத் Εί45, தில்) என்று பூர்வசன பூஷணம் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது. அதாவது இவ்விய தேசங்களைவிட ஞானியரின் திருமேனி யில் எம்பெருமான் கொண்டுள்ள மதிப்பு அளவற்றது; அவன் திவ்விய தேசங்களில் எழுந்தருளியிருப்பது சேத நரை அகப் படுத்திக் கொள்ளுகைக்காகவே யாதலால், அங்கு வசிப்பது சாதனம்; இச்சேதநன் திருந்தி இவனுடைய இதயத்தில் தான் வசிக்கப் பெற்றது. அத்திவ்விய தேச வாசமாகிய கிருஷியின் (வேளாண்மை) பயனாகையால் ஞானியரிடத் தின் வாசமே எம்பெருமானுக்குச் சிறந்த பயனாகும். இதனையே இந்த ஆழ்வார் பிறிதோரிடத்தில், - 7 من مرتين " : "