பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi i8. 'அருங்கவைச் கோன்'என் கின்ற அரியதோர் பட்டத் திற்கே உரியவர்: கணமும் சோரா(து) உழைத்திவர் உயர்வு பெற்றார்! பொருளினைப் பெரிதென் றெண்ணாப் புண்ணியர் உலகம் வாழ அருளினால் பன்னுால் தந்தார்: ஆரிவர் திறம்தேர் வாரே!

  1. 9. பல்கலை ஆய்ந்து, நூல்கள்

பற்பல தந்து தம்மை வெல்பவர் இன்றி நிற்கும் மேன்மையர்! விரிந்த கேள்விச் செல்வராம் இவரோர் ஆசான்! செந்தமிழ் இவர்பால் கற்றோர் நல்லராய் வல்ல ராக விளங்குவர் நானி லத்தே! 20. கலைகளின் களஞ்சி யத்தைக் கணிச்சுளை யாக்கித் தந்த பலகலைச் செல்வர்! நல்ல . பதிப்புக்கள் வரஉழைத் தோர்: தலைமுறை பலவும் வாழத் தத்துவம் சமய மோடு விலைமதிப் பில்லா நூல்கள் விளக்கமாய்த் தந்த மேலோர்! 21. நஞ்சட கோபர் செய்த செந்தமிழ் நமக்குத் தேன்ாய் விஞ்சிய புலமை யாலே விரித்தளித் துள்ளார்! ஆர்த்த