பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 101. கண்களுக்கு இலக்காக்கிக் கொண்டு உபாயவஸ்து நிற்கிறாப் போலே காணும் இவையும் யாவர்க்கும் தொழுகுலமான சர்வேசுவரனுடைய உபாய பாவனையில் நிலைபோலே, நித்திய பிராப்யனாகக் (அடையத்தக்கவனாகக்) கொண்டு அங்கே இருக்கின்றவன், அடியார்கள் உகந்தது ஒரு பொருளைத் திருமேனியாகக் கொண்டு முகம் கொடுத்துக் கொண்டு நிற்பதுபோலே, அங்குள்ளாரும் இங்கே போந்து தாவரங்களாயும் ஜங்கமங்களாயும் விலங்குகளாயும் அவனை விட மாட்டாதே நிற்கிறபடி. நித்தியரும் முக்தரும் சம்சாரிகளில் ருசியுடையாரும் உகந்தருளின நிலங்களைப் ಕ್ಡಲ। கிடப்பது (ஈட்டின் தமிழாக்கம் - திருவாய். 8. திருவண்வண்டுச் : இந்த ஆருக்குப் பேருந்தில் வரும் போதே இயற்கைக் காட்சிகளுக்குக் குறைவில்லை. எம் பெருமானுடைய அசித்தும் சித்திற்குக் களிப்பினை நல்கும் என்ற தத்துவத்தை எண்ணுகின்றோம். நம் மா ழ் வார் மட்டிலுமே இவ்வூர்ப் பெருமானை ஒரு பதிகத்தால் (6.1) மங்களாசாசனம் செய்துள்ளார். பதிகம் மகள் பாசுரமாக' நடைபெறுகின்றது; தூதுப் பாசுரமாகவும் அமைந்துள்ளது. 14. மேலும் விளக்கத்தை மலை காட்டு திருப்பதிகள் (கட்டுரை - 7; காண்க. 13. திருவண்வண்டுர் : திருச்செங்குன்றுாரிலிருந்து கோட்டயம் செல்லும் பேருந்தில் ஏறவேண்டும். மழிக்கீர் என்ற இடத்தில் இறங்கி இடப்புறத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் சாலை வழியாக கல் தொலைவு நடந்து சென்று இவ்வூரை அடையலாம். இப்பொழுது (5.5-89) இந்த ஊருக்கே பேருந்து வசதி இருக்கலாம். ஊரில் எந்தவித வசதிகளும் இல்லை. அழகான சிறிய திருக்கோயில், எம்பெரு மான் : பாம்பனையப்பன்; தாயார்; கமலவல்லி நாச்சியார். நின்ற திருக்கோலம், மேற்கு நோக்கிய திருமுகமண்டலம், -