பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#02 சடகோபன் செந்தமிழ் இதற்கு முன்னுள்ள பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் (5.10) என்ற திருவாய்மொழியில் உன்னை என்று கொல் சேர் வதுவே (1) உன்னை என்று தலைப்பெய்வனே (2): உன்னை என்று கொல் கூடுவதே (9) என்றெல்லாம் கதறி எம்பெருமான் பக்கவிலே கடுகச் சேரவேண்டும் என்று பாரித் திருக்கும் ஆழ்வார் எம்பெருமான் திருவண்வண்டுரில் சந்நிதி பண்ணிக் கொண்டு தனக்குச் சேவை சாதிக்கச் சித்தமாக இருப்பதை நோக்குகின்றார். ஆனால் சேர முடியாத நிலையில் நாயகி நிலையை அடைந்து சில புள்ளினங் களைத் தூதுவிடுகின்றார் (திருவாய் 6.1). தூதுவின் தத்துவம் பிறிதோரிடத்தில் விளக்கப் பெற்றுள்ளது.' இந்தத் திருவாய்மொழியில் பராங்குச நாயகி குருகினங் கள், கருநாரை, புள்ளினங்கள்,அன்னங்கள், பூங்குயில்கள்,கிளி, பூவை, வண்டினங்கள் இவற்றைத் துரது போகும்படி வேண்டு கின்றாள்.முதலில் குருகினங்களைப் பார்த்துப்பேசுகின்றாள்; திருவண்வண்டுர் எம்பெருமானிடம் சென்று தன்னுடைய காதன்மையைத் தெரிவிக்குமாறு இரக்கின்றாள். வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் செய்கொள் செந்நெல் உயர்திரு வண்வண் டூர் உறையும் கைகொள் சக்கரத் தென்கனி வாய்ப்பெரு மானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.(1) 1வைகல் - நாள்தோறும் பூங்கழி - உப்பங்கழி; குருகு - கொக்கு; செய் - வயல்; வினையாட்டியேன். பாவத்தைப் பண்ணின என்னுடைய; காதன்மை - காதல்தன்மை) - 15, இந்நூல் -: கட்டுரை, it. காண்க,