பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 105 9. திருப்புலியூர் : இது குட்டநாட்டுத் திருப்புலியூர் என்று வழங்கப்படுவது. நம்மாழ்வாரின் பதிகம் தோழிப் பாசுரமாக அறத்தொடு நிலை' என்ற துறையில் அமைந்தது (திருவாய்,8.9). அடிக்குறிப்பின் விளக்க ஒளியில் 18. திருப்புலியூர் , திருச்செங்குன்றாருக்கு மேல்திசையில் 19. 4 கல் தொலைவு. கோயில் மிகச் சிறியது. சிதில் மடைந்த நிலையில் உள்ளது. அவசரத் திருப்பணி தேவை. செங்கோட்டை - கொல்லம் இருப்பூர்தி. வழியில் கொட்டாரக்கரா என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 33 கல் தொன் லவு. பேருந்து வசதி உண்டு. எம்பெருமான் : மாயப்பிரான்: தாயார் : பொற்கொடி காச்சியார், நின்ற திருக் கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், அறத்தொடு கிலை : தானும் தலைமகளும் இது காறும் அறத்தொடு பொருந்தவே நடந்திருப்ப தாகத் தோழி காட்டி நிற்றலே இது. அறம் என்பதை ஈண்டு முறை, தக்கது என்று கொள்ளல் வேண்டும். இறையனார் களவியலுரை யாசிரியரும் 'அறம் என்பது, தக்கது, தக்கதனைச் சொல்லி நிற்றல் தோழிக்கும் உரித்தென்றவாறு, அல்லது உம், பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு. கற்பின் தலை நிற்றல் என்பது உமாம்" (இறைகள. நூற்பா 23இன் உரை) என்று உரைத்துள்ளமை ஈண்டு கருதத் தக்கது. தொல்காப்பியர் அறத்தொடு நிற்றலை புரைதிர்கிளவி என்று குறிப்பிடுவர். இறையனார் களவியல் ஆசிரியரோ மாறுகோள் இல்லா மொழி என்பர். - தோழிக் குரியவை கோடாஅய் தேனத்து மாறுகோளில்லா மொழியுமார் உளவே (நூற்.14) - (கோடாய் - செவிலித் தாய்; கோள் - தாய் எனப் பிரித்து தாயாகக் கொள்ளப்படுவோன் எனப் பொருள்படும்). என்றநூற்பாவினால் இதனை அறியலாம். மாறு கோள் இல்லா மொழி என்பதற்கு உரையாசிரியர் கூறும் விளக்கவுரை : "எற்றினொடு மாறு கொள்ளாமையோ எனின், தாயறிவினொடு மாறு