பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சடகோபன் செந்தமிழ் என்பது பாசுரம், எம்பெருமானின் திவ்விய அவயவங்களின் அழகினைக் கண்டு அவ்வடிவழகு அல்லது மற்றொன்று அறியாதபடி ஈடுபட்டாள் என்று தாய்மார்க்கு உரைக் கின்றாள். அநுபவிப்பார் நெஞ்சு குளிரும் படி கருமையுடைய தாய், பிரகாசத்தால் மிக்கு இருப்பதாய், தனக்கு மேல் ஒன்று இல்லாததான இனிமையுடையதாய் இருப்பது ஒருமலை மேலே என்ற கருத்துத் தோன்ற கருமாணிக்க மலைமேல்.’ என்கின்றாள். இத்தகைய ஒரு மலைமீது தெளிந்த ஒரு தடாகம் தாமரைக் காடுகள் பூத்ததுபோல் எம்பெருமானது எழில் நீலமேனியில் திருமார்பு, திருவதரம், திருக்கண்கள், திருக்கைகள், திருவுந்தி, திருவடிகள் முதவிய உறுப்புகள் அமைந்துள்ளன என்பது தோன்ற மணித்தடம்......... ஆடைகள் செய்தபிரான் என்கின்றாள். பக்தர்கட்குப் பற்றுக்கோடாகவுள்ள பெரிய பிராட்டியார் எழுந்தருளி யிருக்கும் திருமார்பு ஆதலால் அது சிவந்து காணப்பெறு கின்றது. அப்பிராட்டி வழியால் உறவு செய்தார்க்கு அநுகூல மான சொற்களைப் பேசுகின்றது அவனது திருப்பவளம். இச்சொற்கள் சொல்லப்புக்கு இனியனான தன்னைக் கண்ட காட்சியால் தடுமாறினால், குறையும் தலைக்கட்டிக் கொடுப்பது செவ்வரி படர்ந்த திருக்கண். அவனது நோக் கிற்குத் தோற்றாரை அணைப்பது திருக்கை. உத்தேசியமான நிலத்தில் (அதாவது திருவடியில்) விழாநின்றால் க்ாற்கட்ட வல்லது திருவுந்தி. இது நடுவே அமுக்கும் சுழி அன்றோ? இவை எல்லாவற்றிற்கும் தோற்று விழும் இடம் எம்பெரு மானது திருவடிகள். இவை யாவும் காட்டிலெறிந்த நிலாப் போல் ஆகாமல் பக்தர்கட்கு அநுபவிக்கக் கொடுக்குமவன் என்பதனைக் குறிப்பிடவே 'பிரான்: (உபகாரகன்) என்கின்றாள். இங்ஙனம் எம்பெருமானின் திருமேனி யழகினை,