பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii பஞ்சக மான இந்தப் பண்புநூல் துணுக்க மெல்லாம் செஞ்சுடர் எனவி ளக்கம் செய்துநற் றமிழர்க் கீத்தார்! 22. அகப்பொருள் தத்து வங்கள், அகம் கவர் தோழிப் பாக்கள் தகவுடைத் தாய்ப்பாட் டின்னும் தண்டமிழ்ச் சுவைகள் பொங்கும் மக(ள்)அருட் பாட்டு, வேத மந்திரப் பாடலெல்லாம் வகையுற உரையிட் டிங்கே வானமு தாகத் தந்தார்! 23. சித்தசித் தீச னென்று செப்பிடும் தத்து வங்கள் புத்தியுள் நிற்கும் வண்ணம் பொலிவுறக் காட்டி, நங்கள் வித்தகர் சடகோ பர்தம் திருவுளம் விளங்க வைத்தார், எத்தணை தரம்உண்டாலும் இனித்திடும் அமுத மொத்தே! 24. மாசறு சோதி தன்னில் மடலெடுத் திணிமை தேக்கும் பாசுரக் கருத்தை நேர்த்தித் தமிழினால் பலரும் கொள்ள ஆசற விளக்கும் சுப்பு ரெட்டியார் ஆயி ரத்துள் மீசுர மாக நின்ற ஒருவராய் மேன்மை உற்றார்: