பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் is திருக்காட்கரை என்ற திவ்விய தேசமும் இத்தகைய இயற்கையழகு மிக்க சூழலில்தான் அமைந்துள்ளது. இந்தத் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நம்மாழ்வார் மட்டிலுமே ஒரு திருவாய்மொழியால் (9.5) மங்களா சாசனம் செய்துள்ளார். இந்த ஆழ்வார் திருக்காட் கரைக்கு வந்தபோது ஒருசமயம் தம் உள்ளத்தில் எம்பெருமானின் பெருமையைக் கூறி மகிழ்ந்தது தம் நினை விற்கு வருகின்றது.* சிறியே னுடைச்சிங்தை புள்மூ வுலகும்தம் நெறியா வயிற்றிற்கொண்டு கின்றொழிந்தாரே -திருவாய் 8.1:8 என்றபடி இறைவன் முறை கெடப் பரிமாறின பரிமாற்றம் நினைவின் பொருளானதோடன்றி அப்போதைய அநுபவமே யாகி விடுகின்றது. இந்த நிலையில் இறைவனுடைய சில குணத்தை (பெரியவன் தாழ்ந்தவர்களுடன் புரையறக் கலக்குந் தன்மை) எடுத்துப்பேசி உள்ளம் கரைகின்றார் ஆழ்வார். பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம் ஆகிய நான்கு நிலைகளில் உள்ள எல்லாக் குணங்களையும் அர்ச்சாவதாரத்தில் காணலாம் என்பது தத்துவம் (ஆசா. ஹிரு. 158). ஆயினும் ஒவ்வொரு திருப்பதியிலும் ஒவ்வொரு குணம் சிறப்பாகப் பொலியும் என்றும் அத்தத்துவம் குறிப்பிடுகின்றது (டிெ-159). இந்தக் கருத்துப்படி திருக்காட் கரையில் சீலகுணம் கரையழியப் பெருகும் என்பது வைணவர் களின் அசைக்க முடியாத நம்பிக்கை, இங்குத்தானே சேஷ. சேஷி பாவனை (ஆண்டான்-அடியவன் பாவனை) தட்டு மாறிப் பரிவர்த்தனை செய்து ஆண்டவனின் சீலகுணம் பெருகி வழிந்தது? 2. பெ. திருவக் (கல்லும் கைடலும்)