பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 12 சடகோபன் செந்தமிழ் நம்மாழ்வார் இந்த எம்பெருமானின் ஆச்சரியமான பரிமாற்றங்களை நினைக்கும் பொழுது நெஞ்சு நீர்ப்பண்டமா கின்றது; கட்டுக்குலைந்து உருகுகின்றது. ஆன்மா தாங்கக் கூடிய அளவுக்கு மீறி ஆசையும் கரைபுரண்டோடுகின்றது. உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி - பெருகுமால் வேட்கையும் என்செய்கேன் தொண்டனேன் - திருவாய் 9 : 6 : 1. (பரம் அன்றி - பொறுக்க அரிதாம்படி) என்ற ஆழ்வாரின் வாக்கினை நினைந்து யாரும் நெஞ்சுரு காமல் இருக்க முடியாது; எம்பெருமான் தாழ நின்று ஆழ்வாருடன் பரிமாறின. சில குணத்தினை நினைக்கும் போது எவரையும் கரையழியச் செய்யும். ஒரு குணத்தையே 'காலம்' என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் கால் தாழ்ந்து கணந்தோறும் புதுமை பிறந்து அநுபவிக்கவல்ல ஆழ்வாரின் பக்தியை நினைந்து போற்றுகின்றோம். அவருக்கு இறைவன் 'அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுத மாக’ (திருவாய் 2.5 : 4) இனிக்கின்றவன் அல்லவா? இந்த மாயனின் அநந்த கல்யாண குணங்களை அவர் நினைக்கத் தொடங்கினால் அந்த நினைவும் நெடுகச் சென்று தலைக்கட்டாது. மீண்டும் அவற்றையே நினைக்கத் தொடங்குவார் ஆழ்வார். இங்ங்ணம் காலம் செல்லுகின்றது. இவ்வாறு நெஞ்சால் நினைக்க முடியாத அந்த அரும்பெரும் குணங்களைத் தம் வாயினால் சொல்லத் தொடங்குகின்றார் ஆழ்வார். தம்மை அறியாமல் அவருடைய வாய் திருக்குணங் களைப் புகழ்த்தவண்ணம் உள்ளது. இங்கனம் புகழ்ந்த வண்ணம் பேசுங்கால் அப்பேச்சு செவிவழி யாக உள்ளே புகுந்து ஊற்றெடுத்து நெஞ்சினை மேலும் கரையச் செய்கின்றது. இவ்விடத்தில் சடு: "பெருக்காற்றின் கரை இடிந்து பின் நீராய்க் கரைந்து போமாறு போலே ஓர் உருவம் ஆக்கிக் காணவொண்ணாதபடி உக்குப்போக