பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 113 நின்றது (9, 6 : 2) என்று குறிப்பது நினைந்து மகிழத் தக்கது. தாழ நின்று பரிமாறின எம்பெருமானுடைய சில குணத்தைப் பாட்டாகப் பாடிப் பரவினாலும் ஆழ்வாருடைய ஆன்மா வேகத் தொடங்குகின்றது. - . நினைதொறும் சொல்லுக் தொறும் நெஞ்சு) இடிந்து-கும் வினைகொல்சீர் பாடினும் வேம் என தாருயிர் (2) என்று பேசுகின்றார் ஆழ்வார். 'எல்லாவற்றுக்கும் குளிர்ச்சி பண்ணக் கடவதான தாமரை மலரை மட்டிலும் கருகப் பண்ணுமாப்போலே, சகலர்க்கும் துன்பம் நீக்குவனவான குணங்கள் எனக்கு மட்டிலும் துன்பத்தை விளைவிக் கின்றனவே” என்கின்றார்; இந்த நிலையில் எம்பெரு மானுக்கு எங்ங்ணம் கைங்கரியம் செய்வது என்று ஏங்கு கின்றார். 'நினைகிலேன் நானுனக்கு ஆள் செய்யும் நீர்மையே’ என்று இதே பாசுரத்தில்(2) மேலும் பேசு கின்றார். ஆழ்வார் பெற்ற அநுபவத்தை மேலும் அறிய வேண்டுவோர் என்னுடைய பிறிதொரு நூலில்' கண்டு தெளியலாம். - 11. திருமுழிக்களம்: ; இந்தத் திருப்பதியும் இயற்கை வனப்பு கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. இத்திருத் 23. மலைநாட்டுத் திருப்பதிகள் (கட்டுரை-10) காண்க 24. திருமூழிக்கனம் : எர்ணாகுளம் - சோரனூர் 醬 வழியில் ஆல்வ்ே' பெத்:ே சுமார் 10 கல் தொலைவிலுள்ளது இந்தத் திவ்விய தேசம், பேருந்து வசதி உண்டு. பேருந்தினின்றும் இறங்கினவுடன் 150 அடி நடந்து திருக்கோயிலை அடையலாம். எம்பெருமான்: திருமூழிக்களத்தான், அப்பன், சிரீசூக்திகாதப் பெருமான், த்ர்யார் மதுரவேணி இாச்சியார். தாயாருக்குத் தனிச் சந்நிதி: . 8 ساعي