பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சடகோபன் செந்தமிழ் தலத்து எம்பெருமானை நம்மாழ்வாரும் 19.7), திருமங்கை யாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கை யாழ்வார் முனியே! மூழிக்களத்து விளக்கே! (பெரி. திரு. 7.1 : 6) என்றும் மூழிக்களத்து விளக்கினை'(பெர். திருமடல் கண்ணி-129) என்றும், நம்மாழ்வார் திருமூழிக்களத்து உறையும் ஒண் சுடர்க்கு (திருவாய் 9.7 : 5) என்றும், 'திருமூழிக்களத்து உறையும் ஒண் சுடரை (டிெ 9.1 : 1) என்றும் போற்றுவர், இரண்டு ஆழ்வார்களுமே இத்தலத்து எம்பெருமானை சுடர்ப் பொருளாகவே அருளிச் செய் திருப்பது கருதத் தக்கது. எம்பெருமானுடைய அனந்த கல்யாண குணங்களுள் செளலப்பியம்’ என்னும் குணம் சிறந்தது. அந்தத் திருக் குணமே இருட்டறையில் விளக்குப் போல் ஒளிர்வது அர்ச்சாவதாரத்தில்தான். அதுவும் சாதாரண மக்கட்கும் காட்சி தரும் இடமாகிய திருமூழிக் களத்தில் அக்குணம் மிகவும் ஒளி பெற்று விளங்குதலால் ஆழ்வார்கள் இருவரும் விளக்கு” என்றும், ஒண்சுடர்' என்றும், சோதி என்றும் கூறியுள்ளனர் என்று கருதலாம். "ஆசாரிய ஹிருதயம் என்னும் நூல் இத்தலத்து எம்பெரு மானிடம் செளமார்ய குணம்’ (அழகு) "கூடு பூரிக்கும்’ என்று குறிப்பிடுகின்றது (சூத்திரம்-179) இருப்பூர்தியில் செல்லும் பொழுதும் பேருந்தில் செல்லும் பொழுதும் இருபுறமுள்ள சோலைகள், நெல்வயல் கள், கமுகு-தென்னந்தோப்புகள் முதலிய இயற்கை வனப்பு களையெல்லாம் கண்டுகளித்த வண்ணம் செல்லலாம். அழகு இல்லை. பகவதி கோயில் உண்டு. கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், நின்ற திருக்கோல்ம். பூசைக் காலங்களில் எந்தவித வாத்ய ஒலியும் இல்லை. கோயிலுக்கு அருகில் ஆல்வே நதி ஓடுகின்றது. இந்தச் சிறிய ஊரில் எந்தவித வசதிகளும் இல்லை. திருத்தலப் பயணிகள் எர்ணாகுளம் அல்லது ஆல்வே யில் தங்குவது சிறந்தது. -