பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் Hi5 கூடு பூரிக்கும் மூழிக்களத்தின் வழியெல்லாம் அழகின் காட்சி கள்தாம். பாரதிதாசனின் அழகின் சிரிப்பு என்ற நூலி லுள்ள கவிதைகளின் காட்சிகள் யாவும் நினைவுக்கு வரச் செய்யும். எண்ணற்ற உயிர்கட்கு எல்லையற்ற இன்பங் களைப் படைத்துப் புரந்து இன்புறும் அலகிலா விளை யாட்டுடை ஆண்டவனின் பெருங்கருணைத் திறத்தினை எண்ணி எண்ணி வியப்படைகின்றோம். - நம்மாழ்வார் திருக்காட்கரை அப்பனின் சீல குணத்தில் ஈடுபட்டார் அல்லவா? அங்ஙனம் ஆழங்கால் பட்டவர் அப்பெருமானை நேரில் காண ஆசைப்பட்டுப் பிராட்டியின் நிலையை ஏறிட்டுக் கொண்டு பராங்குச நாயகியாகத் துரது விடுகின்றார். நாரை, குருகு, கொக்கு ஆகிய பறவை இனங் களையும், வண்டு, தும்பி ஆகிய பூச்சி இனங்களையும் மேகத்தையும் தூது விடுகின்றாள் ஆழ்வார் நாயகி. திருமூழிக் களத்து எம்பெருமானின் அழகையும் குணங்களையும் பற்றாசாகக் கொண்டு அவன்பால் தூது விடுவதாகக் கொள்வது இத்தலத்து மீதுள்ள திருவாய்மொழி, எங்கானல் அகங்கழிவாய் இரைதேர்ந்திங் கினிதமரும் செங்கால மடகாராய்! திருமூழிக் களத்துறையும் கொங்குஆர்பூக் துழாய்முடினம் குடக்கூத்தர்க் கென்துதாய் நூம்தாள்கள் என்தலைமேல் கெழுமீரோ நுமரோடே (1) - (கானல் - உத்தியாவனம்; அகம்கழி - உள்ளிருக்கும் கழி: கொங்கு - தேன்; கெழு மீரோ , சேர்க்கின்றீர்களா) பறவைகளைத் தூது விடுகின்ற இத்திருப்பதிகத்தின் முதற் பாசுரத்திலேயே ஆசாரியர்களே பறவைகளாகக் கருதப்பெறு