பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 117. போன்றிருப்பதால் அவன் எழுந்தருளியுள்ள தலமும் காவாய் என்ற பெயராலே வழங்குகின்றது. திரு என்ற அடைமொழி யுடன் இத்தலம் திருகாவாய் என்று வழக்கிலிருந்து வருகின்றது. துன்பக் கடல்புக்கு வைகுக்தன் என்பதோர் தோணி பெறாதுழல் கின்றேன் -நாச் , திரு 5:4 என்ற ஆண்டாளின் திருப்பாசுரத்திலும் இறைவன் துன்பக் கடல் கடத்தும் தோணியாக அருளிச் செய்யப் பெற்றுள்ளமை நினைக்கத் தக்கது. பராங்குச நாயகி இருந்த இடத்திலிருந்து கொண்டே எம்பெருமானை அநுபவிக்க எண்ணுகின்றாள். வெறித்தண் மலர்ச்சோலைகள் சூழ்திரு நாவாய் குறுக்கும் வகையுண்டு லிேக் கொடியோ கொடி யேற்கே (1) (வெறி - நறுமணம்; குறுக்கும் குறுகும், மலையாள மொழி வழக்கு) என்று மநோரதங்களைப் பண்ணுகின்றாள். இந்தத் திவ்விய தேசத்துக்கு அண்மையில் வாழும்படியான உபாயம் உண்டோ என்று எண்ணுகின்றார். குறுகும்வகை என்பது மலையாள மொழி வழக்கு. இதுபற்றி ஒர் ஐதிகம்: ஒரு சமயம் இராமநுசர் மலைநாட்டுத் திருத்தலப் பயணத்தை மேற்கொண்டபோது திருநாவாய்க்கு அணித்தாக வந்து கொண்டிருந்தார்: எதிரிலே வந்து கொண்டிருந்த மலை யாளர்களை நோக்கி, திருநாவாய் எவ்வளவு துரமுண்டு' என்று வினவ, அவர்கள் குறுக்கும்’ என்றார்கள். அண்மை யில் உள்ளது என்பது இதன் பொருள். எம்பெருமானார். இதனைக் கேட்டு "இப்பகுதி மொழியாலன்றோ அருளிச்