பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் # 9 வசதி யுள்ளவர்க்கு இப்பயணத்தில் சிரமம் அதிகம் தெரியாது. இத்தகைய வாய்ப்பு இல்லாதவர்கள். காலை யில் ஒரு திருப்பதியும் மாலையில் ஒரு திருப்பதியுமாகச் சென்று சேவித்தல் நன்று. பெரும்பாலும் மலைநாட்டுத் திருப்பதிகளிலுள்ள திருக்கோயில்கள் காலையில் (7; 12) மணி வரையிலும் மாலையில் (54 - 8 மணி வரையிலுமே திறந்து வைக் கப்பெற்றிருக்கும், பேருந்து வசதிகளிருப்பினும் அவை புறப்படும் நேரம், திரும்பும் நேரம், ஆங்காங்குக் கிடைக்கும் தங்கும் வசதிகள், உணவு வசதிகள் இவற்றைப் பொறுத்தே நம் பயணம் நிறைவு பெறுதல் வேண்டும். சொந்த வாகன வசதியில்லாதவர்கள்-கேரளத்திற்குப் புதியவர்கள்- பல்வேறு சங்கடங்களை அநுபவிக்கத் தயாராக இருத்தல் வேண்டும். உடலில் வலுவும் எதையும் சகித்து நிற்கும் ஆற்றலும் உள்ளவர்கட்குக் கேரளத் திருத்தலப் பயணம் ஆனந்தமாகவே இருக்கும். இயற்கைக் காட்சிகளும் தட்ப-வெப்ப நிலையும் மனத்திற்குக் களிப்பாக இருக்கும் சோர்வின்றித் திருப்பயணத்தை இனிதாக முடிக்கலாம்.