பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் 121 1. திருவேங்கடம்" இன்று இது "திருமலை’ என்று வழங்கப் பெறுகின்றது. இம்மலை வழி வழியாக ஏழுமலை (சப்தகிரி) என்றும் வழங்கப் பெறுகின்றது. இப் பொழுது பேருந்துகள் மலையிலிருந்து இறங்கும் வழியில் இம்மலையின் பெயர்ப் பலகைகளைக் காணலாம். சில ஆண்டுகட்குமுன் இம்மலைச் சாலை ஏறும் வழியாகவும் அமைந்திருந்தது. இந்த வழியில் கீழிருந்து மேலே செல்லுங் கால் முதலில் காண்பது எருத்து மலை (விருஷபாத்திரி). அடுத்து முறையே நீலமலை (நீலாத்திரி), மைவரை (அஞ்சனாத்திரி), பாம்புமலை (சேஷாத்திரி, அரவக்கிரி), கருடமலை (கருடாத்திரி) , நாராயணமலை (15mgir யணாத்திரி), வேங்கடமலை (வேங்கடாத்திரி) என்ற மலை களைக் காணலாம். அத்திரி - மலை; வரை - மலை கிரி. மலை, கோயில் (திருவரங்கம்), திருமலை, பெருமாள் 2. திருவேங்கடம் : ஆந்திர மாநிலத்தில் சித்துார் மாவட்டத்தில் உள்ள ஒரு திவ்வியதேசம், காட் பாடி-ரேணி குண்டா இருப்பூர்தி வழியில் ஒரு நிலை யம். நிலையத்திலிருந்து மலை முன்று கல் தொலை விலுள்ளது. ஏழு கல் தொலைவு கடந்தால் மலை யின் உச்சியை அட்ையலாம். திருப்பதியிலும் திருமலையிலும் பக்தர்கள் தங்குவதற்கு வாடகை யிலும் வாடகையின்றியும் ஏராளமான சத்திரங்கள் தேவஸ்தானப் பொறுப்பில் உள்ளன. உணவு விடுதி களும் உள்ளன. தனியாரும் கட்டட வசதிகளும் உணவு வசதிகளும் செய்துள்ளனர். மலைக்குச் செல்வதற்கு அடிக்கடிப் பேருந்து வசதிகள் உள்ளன. வடநாட்டார் இத்தலத்தை பாலாஜி' என்று வழங்குவர். நாடோறும் எண்ணற்ற திருத்தலப் பயணிகள் வந்து வழிபட்டுச் செல்லுகின்றனர். திருமலையில் கோயிலமைப்பு பூலோக வைகுந்தம் போல் காட்சியளிக்கும். பரமபதத்தை அடைந்தது போன்ற மகிழ்ச்சியை விளைவிக்கும். மலையில் பல தீர்த்தங்கள் உள்ளன. கோயிலுக்கு அடுத்து இத்தலம் 2.3 ஆழ்வார்களின் பாசுரங்கள் பெற்றது. நம்மாழ்வார் பாசுரங்கள் மட்டிலும் 62.