பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சடகோபன் செந்தமிழ் கோயில் (காஞ்சி) என்று வைணவப் பெருமக்களால் பேர்ற்றப் பெறும் மூன்று திவ்விய தேசங்களுள் இது நடு நாயகமாகத் திகழ்கின்றது. திருவேங்கடத்தைப்பற்றி 213 பாசுரங்கள் நாலாயிரத்தில் காணப்பெறுகின்றன. இவை பத்து ஆழ்வார்கள் பாடியவையாதலால் முத்தமிழ்க் கவி வீரராகவமுதலியார் பதின்மர் செந்தமிழ்’ என்று போற்றிப் புகழ்வர். நம்மாழ்வார் பாடியவை மட்டிலும் 62 பாசுரங்கள், தம்முடைய முதல் பிரபந்தமாகிய திருவிருத்ததில் திருவேங்கடம் முதன் முதலாக மங்களா சாசனம் செய்யப் பட்டதால் திருமலை என்று சிறப்பிக்கப் பெற்றுள்ளது. கோயில் பற்றி முன்னர் விளக்கப்பட்டது. இம்மூன்றற்கும் நடுநாயகமாயுள்ள (கோயில்,திருமலை, பெருமாள் கோயில்) திருமலையைப் பற்றிய ஒரு பாடலைக் காண்போம். இசைமின்கள் துரதென் றிசைத்தால் இசையிம்ை என்தலைமேல் அசைமின்கள் என்றால் அசையும்கொலனம் அப்பொன் மாமணிகள் திசைமின் மிளிரும் திருவேங் கடத்துவன் தாள்சிமயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே -திருவிருத் , 31 இசைமின்-ஒப்புக்கொள்மின்; ைச யி ல ம் - ஒப்புக் கொள்ளவில்லை; அசைமின்கள் . பொருந்துங்கள்: வல்தாள் - வவிய அடிவாரம்: சிமயம் - சிகரம்; 3. திருவேங்கடக் கலம்பகம் 24. இதன் ஆசிரிய" அந்தகக் கவிவீரராகவ முதலியாரின்பேரர். செங்கற் பட்டுக்கு அருகிலுள்ள பொன் விளைந்த களத் 4 தப் பாசுரங்கள் விருத். 8 蠶 திருவிருத், 8, 10,