பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் #23 மிசை . மேல்; திசை - திக்குகள்; மின்மிளிரும் . மின்னல்போல் பிரகாசிக்கும்; மிளிரிய விளங்க; வழிகொண்ட - பிரயாணப்பட்ட) என்பது தூதுப் பாசுரம். இங்குத் தூதுசெல்லாத மேகத்தைக் குறித்துத் தலைவி இரங்குகின்றாள். திருவேங்கடமலை மேல் சென்று சேரும் பொருட்டுப் பயணப்பட்ட மேகங்களை நோக்கித் தலைமகள் என்னைப் பிரிந்து அங்குச் சென்று வசிக்கின்ற என் தலைமகனுக்கு என் நிலைமையைச் சொல்லுமாறு நீங்கள் எனக்குத் தூதராக வேண்டும் ஒன்று வேண்ட, அதற்கு அவை உடன்படக் காணாமையால் மீண்டும் அவற்றை நோக்கி, அவனுள்ளவிடத்து ஏறச் செல்லும் பேறு பெற்ற நீங்கள் அங்ங்ணம் செல்ல மாட்டாத என் தலைமேல் உங்கள் பாதத்தை வைத்தாவது செல் லுங்கள்’ என்று வேண்டுகின்றாள். திருமலைத் தலைமேல் சென்று தங்குவதற்கு விரைகின்ற அவை இவள் தலைமேல் தங்கி நிற்பதற்கும் இசைதல் அரிதாக இருக்கும் தன்மையைக் குறித்து தலைவி இரங்குகின்றாள். இங்கனம் பலவாறு கூறி அலற்றுதற்குப் பயன் யாதெனில் முடியிருந்து வேவதோர் கொள்கலம் மூடி திறந்த விடத்து ஆவி எழுந்து முன்னின்ற வெப்பம் நீங்கினாற்போல, ஆற்றாமையால் உள்ளே மிக்குநின்ற தாபத்தை வாய்விட்டு வெளியிட அது சிறிதளவு குறைதலேயாகும். இவ்விடத்தில் பெரியவாச்சான் பிள்ளை பூரீசூக்திகள் மிக சுவையுடன் அநுபவிக்க வேண்டியவை கீழ் (32) நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமானுக்கு என்று பரமபதத்தே தூது விட்டாள்; அது பரபக்தி, பரஞானம், பரமபக்தியுடையார்க்கல்லது புகவொண்ணாத தேசமாகை யாலே அவதாரங்களிலே தூதுவிடப் பார்த்தாள்; அதுவும் சம காலத்தில் உள்ளார்க்காய்ப் பின்னை இல்லை யாகையாலே பிற்பட்டார்க்கும் அநுபவிக்கலாம் படிச்