பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i24 சடகோபன் செந்தமிழ் சுலபமான திருமலையிலே திருவேங்கடமுடையான் திருவடி களிலே மேகத்தைத் துதாக விடுக்கின்றாள், திருமலையை நோக்கிப் போகின்ற மேகங்களே, தூதுச் செய்தியைக் கொண்டு போய்ச் சொல்லுங்கள் என்றால், சொல்லு கின்றீர்கள் இல்லை; திருமலைக்குப் போகிற பராக்கிலே பேசாது போகின்றவற்றைக் கண்டு, நீங்கள் சொல்ல மாட்டீர்களாகில் உங்கள் திருவடிகளை என் தலை மேலே வையுங்கள் என்றால் வைக்க மாட்டீர்களா? திருமலைக்குப் போவாருடைய திருவடிகள் உத்தேச்யமாயிறே இருப்பது? திருமலைக்குப் போகிறவர்களைத் தலையிலே வைக்கக் கிடைக்குமோ? திருவடியைப் (அதுமனைப்) பிராட்டி இங்கே ஒரிராத் தங்கிப் போக வேண்டுமென்று அருளிச் செய்ய, ஒண்ணாது என்று அவனும் மறுத்துப் போனாப்போலே போகா நின்றன’’ என்று. - தொண்டை நாட்டுத் திருப்பதிகள்மீது ஆழ்வார் பாசுரங்கள் இல்லையானாலும் ஒரே - பாசுரம் உண்டு. அதுதான் பெருமாள்கோயில் மீது (காஞ்சி). இதுவும் ஆழ்வாரின் முதல் பிரபந்தம் பற்றியது என்பது கருதத் தக்கது; அதை ஈண்டுக் காட்டுவேன். கானிலம் வாய்க்கொண்டு நன்னீர் அறமென்று கோதுகொண்ட வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ்பாலை கடந்த பொன்னே? கானிலம் தோய்ந்து விண்ணோர்தொழும் கண்ணன்ன வெஃகாஉதுபூங் தேனிளஞ் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே (2.6) (நால் நிலம் - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்; வாய்கொண்டு . வாயில் பெய்து கொண்டு; அற நீங்கும்படி, கோது - நீக்கப்பட வேண்டிய பகுதி: