பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் - - 125 வேனில் அம் செல்வன் . சூரியன், வெஃகா - சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில்; அப்பாலது . அவ்விடத்திலுள்ளது: எப்பாலைக் கும் எல்லாத்துன்பத்திற்கும்; சேமத்தது - இன்பம் தருவது; நகர் காட்டல் என்பது இப்பாசுரத்திற்குரிய துறை உடன் போக்கில் நாயகன் நாயகியை உடன் கொண்டு. இடைவெளிப் பாலை கடந்து தன் ஊருக்குப் போகும்போது அவளுக்கு வழிநடை இளைப்புத் துன்பம் தோன்றாதிருக்கும் பொருட்டு அவளை நோக்கி, அதோ தெரிகின்ற அப் பெரிய நகர் காண் நம்முடைய நகர் என்று தனது நகரைக் காட்டி அண்மை தோன்றக் கூறுவது இத் துறையாகும். "புணர்ந்துடன் போன தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம்' என்பர் அழகிய மணவாள சீயர். தலைவனும் தலைவியும் தாம் ஒருவருக்கொருவர் தனி நிழலாயிருக் கையாலே இவர்களுக்கு இந்நிலத்தின் கொடுமையால் உண்டர்கும் இளைப்பு இல்லையாகிலும் பொழுது போக்காகத் தலைவன் தலைவியை நோக்கி இங்கனம் கூறினது என்றலும் உண்டு. நாயகி, நம்முடைய வழி நடையில் தெய்வாதீனமாய் பாலை நிலத்தைத் தாண்டி விட்டோம். அஃது இனித் தாண்டவேண்டியிருந்தால் மிகவும் சிரமப்பட வேண்டியதாக இருக்கும். நல்ல காலமாய் அதைத் தாண்டி விட்டோம். இனி நமது நகர் அண்மையில் தான் உள்ளது” என்கின்றான் நாயகன். பகலவன் நால்வகை நிலங்களையும் தன் கதிர்களால் வாயிற் பெய்து கொண்டு சாரமான நீர்ப்பசை அறும்படி நன்றாக மென்று சார மற்றதை உமிழ்ந்த பகுதியே பாலை நிலம்; அதனைத் தாண்டியாயிற்று. -