பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சடகோபன் செந்தமிழ் எம்பெருமான் அருளிச் செய்ய, "அங்குள்ளாரும் இங்கே வந்தன்றோ அநுபவிக்கின்றது? அப்படியிருக்க எனக்கு மாத்திரம் தேசவிசேடமா? என்கின்றார். "அப்படியல்லாமல் வேறு பயன்களைக் கருதுகின்ற தேவர்கள் கூட வேறு பயன் களைக் கருதாதாரைப் போன்று வந்து அடையும்படி நிற்கின்ற இடத்தை நான் இழந்து போவதோ? என்கின்றார் எனவும் கொள்ளலாம். இமையோர்களை சுவர்க்கலோகத்திலுள்ள தேவர்களைச் சொன்னதாகக் கொண்டால் தான் இப் பொருள். அப்படியின்றி இதற்கு நித்தியசூரிகள்’ எனக்கொண் டால் இப்பொருள் பொருந்தாது(6): மெய்ந் நான் எய்திஅெடியேனாகிய நான் உண்மையாகவே உன்னை அடைந்து (முன்பாசுரம்) இந்தஞான இலாபம் எனக்கு உண்டாயிற்று என்பது உண்மைதான். அதுபலத்தோடு கூடியல்லது நில்லாது என்பதும் உறுதியே, ஆனால் உன்னுடைய இனிமை நெஞ்சுக்கு பொருளான பின்பு என்னால் தரித்திருக்க முடியாது’ என்கின்றார் (7). - . 'உன்னைச் சேர்தற்கு என் தலையில் ஒரு சாதனமும் இல்லை என்றீர்: இஃது ஒரு வார்த்தையோ? சாதனத்தைச் செய்தார்க்கு அன்றிப் பலம் உண்டோ? என்று எம்பெருமான் சொல்ல, அவரவர்களுடைய விருப்பங்களைப் பெறுதல், சாதன அநுட்டானத்தாலே என்றிருக்கும் நான்முகன் முதலாயினோர்க்கும் கிட்டினால் பாசுரம் இதுவேயன்றோ? என்கிறார். தாந்தா முடைய ஆகிஞ்சன்யத்தை (கன்ம ஞான பக்திகளாகிற மற்ற உபாயங்களில் தொடர்பற்றிருக்கை) முன் விடு மத்தனை போக்கி, ஒரு சாதனத்தைச் செய்து பெறலாம் படியோ நீ இருக்கிறது? (8). தாம் விரும்பியவாறே காணப் பெறாமையாலே, இப்போதே உன்னைக் காணாவிடில் தரிக்க மாட்டேன்’ என்கிறார் (9). தம்முடைய எண்ணம் சடக்கெனச் சித்திக்கைக்காகப் பெரிய பிராட்டியாரைப்