பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் - - 135 எம்பெருமானை மங்களா சாசனம் செய்கின்றார். இத் திருவாய்மொழி ஆழ்வார், நாயகி சமாதியில் நின்று பேசுவதாகும். ஆழ்வார்நாயகி தம்முடைய ஆசையின் மிகுதியைக் காட்டுவதே இத்திருவாய்மொழி. ‘. மடலெடுக்கையென்று தமிழில் (அகஇலக்கியத்தில்) ஒரு முறைமை உண்டு. நாயகன் வேட்டையாடப் புறப்படு கின்றான். தலைவியும் தோழியும் பூக்கொய்து விளையாடப் புறப்படுகின்றனர். யாதோ ஒரு காரணத்தால் தோழி தலைவியை விட்டுப் பிரிய நேரிடுகின்றது. அவ்வமயம் தலைவன் அங்கு வந்து சேர்கின்றான். ஊழ்வலியால் கண்கள் சந்திக்கக் கண்கலவி ஏற்படுகின்றது. பிறகு அந்த ஊழே பிரியவும் காரணமாகின்றது. அந்தப் பிரிவைக் பொதுக்கமாட்டாத தலைவி அவனோடு கூடுவதற்காகச் செய்யும் முயற்சிதான் மடலூர்தல் எனப்படுவது. தலைவனை ஒரு படத்தில் எழுதி வைத்த கண் வாங்காமல் அவனைப் பார்த்துக் கொண்டு மலர்கள், சந்தனம் முதலிய போகப் பொருள்களையும் உதறித் தள்ளி ஊனும், உறக்கமும் உடம்புகுளித்தலும் இன்றிப் பனை மடலைக் கையில் ஏந்திக் கொண்டு" அதனால் உடம்பை மோதிக் கொண்டு தலைவிரிகோலமாக இன்ன படுபாவி என்னைக் காக்கமாட்டாதே கைவிட்டான். அவன் கண்ணற்றவன்; அவனிலும் விஞ்சிய கொடியன் இல்லை: என்று தெருவேறக் கதறிக் கொண்டே கேட்போரெல்லாரும் நடுங்கும்படியாக இரங்கும்படியும் திரிந்து உழல்வதுதான் மடலூர்தல் ஆகும். - இங்ங்ணம் மடலூர்தலின் பயன்தான் யாது? இதனைக் கண்டு அரசன், ஊர்ப் பெருமக்கள் இவளது ஆர்த்தியைக் 10. சங்க இலக்கியங்கள் பனைமடலால் செய்யப் பெற்ற குதிரையில் ஊருவதாகப் பேசும், - -