பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 சடகோபன் செந்தமிழ் கண்டு பொறுக்க மாட்டாத கருணையினால் இருவரையும் கூட்டிவைப்பர். உறவுமுறையினர் யாராவது கூட்டி வைப்பர்: தோழிமாராவது கூட்டி வைப்பர். நாயகனே பழிக்கு அஞ்சி கூடினும் கூடுவன். ஆழ்வார் இப்படி எம்பெருமானைப் பழித்துக் கொண்டு தெருவில் வருகின்றாரா எனில்: இல்லை. மடலூர்வதாகச் சொல்லி அச்சமுறுத்தின மாத்திரமேயன்றி அதனை முற்ற முடிய நடத்தினபாடில்லை. “உலகுதோறும் அலர்துற்றி, ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே"(9), யாம் மடமின்றித் தெருவுதோறு அயல் தையலார் நாமடங்காப்பழி தூற்றி நாடும் இரைக்கவே(10), "யாம் மடலூர்ந்தும் மதம் ஆழியங்கைப் பிரானுடை தூமல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்’(10) என்றும். உள்ள பாசுரங்களால் இஃது அறியப்படும். . இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் ஒரு பாசுரம் துவராபதி மன்னன் மீது எழுகின்றது. அன்னையென் செய்யில்ஏன்? ஊரென் சொல்லில்என்? தோழியீர் என்னை யினியுமக் காசை வில்லை: அகப்பட்டேன் முன்னை அமரர் முதல்வன் வண்துவ ராபதி மன்னன் மணிவண் ணன்வாசு தேவன் வலையுளே(6) (என்னை - என்திறத்தில்; துவராபதி மன்னன் . கண்ணன்; வலையுள் . விலையினுள்ளே அகப்பட் டேன் . சிக்கிக் கொண்டேன்) என்பது பாசுரம். நீ இங்கனே துணிவு கொண்டால், ஆன்னை சீவிக்கமாட்டாள். அதனாலே ஊரார் பழிப்பும் மிகும் என்று தோழி, சொல்ல, "கண்ணபிரானுடைய