பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத்திருப்பதிகள் 137 குணசேஷ்டிதங்களிலே நான் அகப்பட்டேன். இனி யார் என் செய்தாலென்ன?’ என்கின்றாள். இங்கே ஈட்டு சூரிசூக்தி: 'ஆழ்வார். திருவரங்கப் பெருமாளரையர் (எம்பெருமானை) வலையாக அபிநயித்துப் பாடாநிற்க, திருக்கண்களைக் காட்டியருளினார் எம்பெருமானார். *கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயிறு" என்னக் கடவதிறே. அநுகூலம் போலேயிருந்து தப்பாதபடி அகப் படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன். 3. வடமதுரை ஒரு திருவாய்மொழிப் பாசுரத்தில் (8.5 :9) உத்தர மதுரைப் பிறந்த மாயன்' என்கின்றார். 11. வடமதுரை : தில்லி போகும் இருப்பூர்தி வழியில் உள்ள நிலையம், நிலையத்திலிருந்து ஒரு கல் தொலைவிலுள்ளது. முத்தி தரும் நகரங்கள் ஏழினுள் இதுவும் ஒன்று. கண்ணுக்கு மதுரமா யிருத்தலாலும் மது என்ற அசுரனை அழித்த, இடமாதலாலும் இதற்கு மதுரை” என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர். யமுனை நதியின் கரை யில் உள்ளது. இதன் கரையில் திருத்தலப் பயணிகள் நீராடுவதற்கேற்ற நல்ல படித்துறை யொன்று அமைக்கப் பெற்றுள்ளது. கண்ணனைப் பற்றிய பழங்கால இடங்கள் யாவும் முகம்மதியர்களின் படையெடுப்பின் பொழுது அழிக்கப் பெற்றன. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருக்கோயில் கள் இன்று ஒன்றுகூட இல்லை. பிற்காலத்தில் எழுந்த கட்டடங்களும் பாழடைந்து கிடக்கின்றன. கண்ணனுக்குரிய கேசவமந்திர் என்ற திருக்கோயில் இன்று இல்லை. அந்த இடத்தில் ஒரு பெரிய மசூதி உள்ளது. இன்று இந்த மசூதியைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் ஒரு பெரிய கட்டடம் பல கோடி ரூபாயில் எழும்பியுள்ளது. இங்குக் கண்ணனுக்குத் தனிக்கோயில் உள்ளது. பளிங்குக் கற்களாலானது. இக்கோயிலிலுள்ள கண்ணனின் சிலை கண்டோரை ஈர்க்கும் பாங்கில் உள்ளது. இத்திருக்கோயிலுக்கருகில் வாசுதேவர் . தேவகிக் குக் கம்சன் அமைத்த சிறையின் நினைவாக ஒரு