பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை பேராசிரியர் டாக்டர். தி. வைத்தமாகிதி எம்.ஏ., பி.டி.,பி.எச்.டி.

  • சடகோபன் செந்தமிழ்’ என்னும் இந்த "நன்னூல்' பேராசிரியர் டாக்டர் க. சுப்புரெட்டியார் அவர்கள், தமிழ் கூறும் நல்லுலகிற்கு, இப்போது, புதிதாக ஆக்கித் தந்துள்ள ஒன்று. பேராசிரியர் அவர்கள் பயன்மிக்க பல நூல்களை, எழுதிப் பெரும் எழுத்துப் பணியாற்றியுள்ளவர்கள். அவர்கள் தந்துள்ள நூல்கள் தம் பொருளாலும், பொருளைச் சொல்லும் வகையாலும் தரத்தில் உயர்ந்தவை என்ற பாராட்டை அறிஞருலகிடமிருந்து பெற்றவை . அத்தனை யும் சிறப்பானவையே. அவர்களது உயர்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத் தலைவர் ஆகிய, பேராசியப் பணியில் ஈடுபாட்டோடு, தம்மிடம் பயில்வோரைத் 'திருத்திப் பணி கொண்ட அநுபவத்திற்கும், தமிழ் இலக்கிய, சமய இலக்கிய நூல்களில், அவர்களுக்குள்ள ஆழ்ந்த புலமைக்கும், தெளிந்த பார்வைக்கும் எடுத்துக் காட்டுகளாக விளங்குபவை, அத்தகைய அறிவு சான்ற பெரியாரின் எழுத்தாற்றல், இப்போது சடகோபன் செந்தமிழ் என்ற நூலை மிகுந்த ஆர்வத்துடன் தமிழ் உலகிற்கு அளிக் கின்றது. -

சடகோபன் செந்தமிழ் பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்களது அடிமனத்தில், அநுபவமாகப் பல நாட்கள் படிந்து, படிந்து, அன்னாரின் மனம் முழுவதையும் நிறைக்க முயல்கின்ற வொன்று இலக்கிய ஆக்கம் பெற்று எழுத்து முயற்சியாகிவிட்டது என்றே தோன்றுகின்றது. ஏனென்றால், சைவ மரபினரான அவர்கள் வைணவ நெறி