பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் 143 இவ்வாறு திருப்பாற்கடல் நாதனை அநுபவிக்கின்றார் நம்மாழ்வார்: நின்னை அடியேன் நேரில் கண்டதில்லை; நீ திருப்பாற்கடலில் கிடந்திருக்கும் திருக்கோலத்தைச் சாத்திரம் அறிந்த பெரியோர்களின் வாயிலாகக் கேட்ட அளவிலேயே இப்படியும் ஓர் அழகு உண்டோ? என்று சறிபட்டுக் கால், நடை தளராமல் ஆழ்ந்து போகின்றது: நெஞ்சு நீர்ப்பண்டமாகக் கரைந்து அழிந்து போகின்றது. கண்கள் ஒரு பொருளையும் பார்த்து அறியாதபடி சுழவத் தொடங்குகின்றன" என்று கூறுகின்றார். இந்தப் பாசுரத்தால் எம்பெருமான் சயனத்திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார் என்பது தெரிகின்றது. எம்பெருமானின் திருநாமம் திருப்பாற்கடல் நாதன் (rராப்திநாதன்) தெற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு புயங்க சயனத்தில் (பாம்பனை மேலான்) காட்சி தருகின்றார். தாயார், கடல் மகள் நாச்சியார். இந்த எம்பெருமானை மானசீகமாகத்தான் சேவிக்க வேண்டும். - திருப்பாற்கடல் நாதனைப் பற்றிச் சாத்திரம் என்ன கூறுகின்றது? இவன் வியூக நிலை எம்பெருமான். வியூக மாவது, லீலாவிபூதியில் (இவ்வுலகில்) அதன் படைப்பு, காப்பு, அழிப்பு இவற்றை நடத்துவதற்காகவும், சமுசாரி கட்கு வேண்டியவற்றை சந்து, வேண்டாதவற்றைப் போக்கி அவர்களைக் காத்தற் பொருட்டும், தன்னை இடையறாது நினைப்பவர்கட்கு (உபாசிப்பவர்கட்கு) அவர்தம் தளைகளை கடைந்துதான் அமுதம் பெற்றுத் தேவர்கட்கு வழங்கினான் எம்பெருமான். பெரிய பிராட்டியார் பிறந்த இடம் இதுதான். அவரை இறைவன் ஏற்றான். - w - 13. இறைவன் இருக்கும் இருப்பைப் பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்று ஐந்து வகையோடு இருப்பதாக வைணவ நூல்கள் பேசும். -