பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சடகோபன் செ ந்தமிழ் போக்கித் தன்னை வந்து அடைந்தவர்கட்குக் காரணமான பேரருளைச் சுரப்பதற்காகவும், வாசுதேவன் சங்கர்ஷணன் பிரத்யும்னன் அதிருத்தன் என்ற பெயர்களுடன் இருக்கும் நிலையாகும். இவற்றுள் வாசுதேவ ரூபமான பரத்துவத்தில் ஞானம் சக்தி பலம் ஐசுவரியம் விரியம் தேஜஸ் என்ற ஆறு குணங்களும் நிறைந்திருக்கும். ஏனையவை மூன்றில் அவரவர் மேற்கொண்ட செயலுக்குத் தக்கவாறு ஒவ்வோர் இரண்டிலும் இரண்டிரண்டு குணங்கள் விளக்கமாக இருக்கும். சங்கர்ஷரானவர் ஞானம் பலம் என்ற இரண்டு குணங்களையுடையவர்; இவர் பிரகிருதிக்குள் உருமாய்ந்து கிடக்கும் உயிர்த் தத்துவத்திற்குத் தலைவராக நின்று அதனைப் பிரகிருதியினின்றும் வேறாக்கிப் பிரத்தியும் ன நிலையையும் அடைந்து வேதம் முதலிய சாத்திரங்களை வெளியிடுவதையும் உலக அழிப்பையும் செய்பவனாக இருப்பார். பிரத்தியும்நரானவார் ஐசுவரியம் வீரியம் என்ற குணங்களோடு கூடி ஞானத்திற்கு ஊற்றுவாயான மனம் என்ற தத்துவத்திற்குத் தலைவராக நின்று சாத்திர முறைப்படி ஒழுகவேண்டிய தர்மோபதேசத்தையும், சுத்த வர்க்க சிருஷ்டியையும் செய்யவேண்டியவராக இருப்பார். அநிருத்தரானவர் சக்தி, தேஜஸ் என்ற இருகுணங்களோடும் கூடி உலகப் பாதுகாப்பிற்கும் உயிர்கள் ஈடேறுவதற்குத் தகுதியான தத்துவ ஞானங்களைக் கொடுத்தற்கும், காலப் படைப்பிற்கும் மிச்ரவர்க்க சிருஷ்டிக்கும் உடையவராக இருப்பார். இந்த நான்கு வியூகங்களும் ஒவ்வொன்றும் மும் மூன்றாகப் பன்னிரண்டு கிளை வியூகங்களாகப் பிரியும். வாசுதேவர் கேசவன், நாராயணன், மாதவன் என்ற மூன்றாகவும்: சங்கர்ஷணர் கோவிந்தன், விஷ்ணு மதுசூதன னாகவும்; பிரத்தியும்தர் திரிவிக்கிரமன், வாமனன், சிரீதரனாகவும்; அநிருத்தர் இருடிகேசன்,