பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் #49 மாகக் கொண்டு நிற்கின்ற பரவாசுதேவர், வியூக வாசுதேவர். மூன்று மூர்த்தி-சாத்விகம், இராசசம், தாமதம் என்று மூன்று வகைப்பட்ட அகங்காரம் என்கின்ற தத்துவத்தைச் சரீரமாகக் கொண்டு நிற்கும் சாங்கர்ஷணர், பிரத்யும்நர், அநிருத்தர். பல மூர்த்தி: 'எந்நின்ற யோனியு மாய்ப் பிறந்தாய்' (திருவிருத். 1) என்ற அநேக விபவாவதார மூர்த்திகள் (அவதாரங்கள்).இன்னும், இந்த ஆழ்வார், வியூக நிலை எம்பெருமானை மிக அழகான உவமையாலும் எடுத்துக் காட்டுவர். மாநீர் வெள்ளி மலைதன்மேல் வண்கார் நீல முகில்போல துர்ேக் கடலுன் துயில்வானே (8.5 : 4) (மாநீர் ஆழ்ந்த நீர்; வண்கார் - அழகிய கார்காலம்; முகில் - மேகம்; தூநீர்க்கடல் - வெளுத்தபாற்கடல்) திருப்பாற்கடலின் திருஅனந்தாழ்வான்மீது எம்பெருமான் திருக்கண் வளர்வதானது ஆழ்ந்த நீர்க்குள்ளே அழுந்தின தோடு வெள்ளி மலையின்மீது காளமேகம் படிந்தாற் போன்றுள்ளது என்கிறார். 5. திருகாடு ' ; இதை வைகுந்தம் என்றும், பரம பதம்’ என்றும், 'நலம் அந்தம் இல்லதோர் நாடு என்றும் 15. திருகாடு : நித்திய விபூதி என்றும் வழங்கப் பெறும். இந்த உலகின் ஆனந்தம் ஒப்பற்றதாக இருக்கும் பான்மையது. இங்குத்திவ்விய கற்பகச் சோலைகள். நானாவித மலர்கள் நிறைந்த திவ்விய பூங்காக்கள், திவ்விய இளமரக்காக்கள், திவ்விய செங்குன்றங்கள், நீராடும் திவ்விய தடாகங்கள் முதலியவை நிறைந்து இருக்கும். இங்கு மிகவும் இடமகன்ற நிரதிசய ஆனந்தமயமான திருமாமணி மண்டபம் ஒன்றுண்டு. உபய விபூதிகளிலுள்ளவர் களும் ஒரு மூலையில் அடங்கும்படியான மிகவும்