பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟5翰 சடகோபன் செந்தமிழ் வழங்குவர் வைணவப்பெருமக்கள். ஆழ்வார்கள்'பெருநிலம்: பெருவிசும்பு’, உம்பர் உலகு", "விண்ணகம்', "நாரணன் உலகு', 'இன்ப வீடு', 'அமரர் உலகம் வானோர் கடிநகர்’ என்றெல்லாம் பன்னி உரைப்பர். வைகுந்தநாதன் வீற்றிருக்கும் இடம் திருமாமணி மண்டபம். இவன் வீற்றிருக்கும் சீரிய சிங்காதனம் அற்புதமான கோப் புடையது. பன்னிரண்டு இதழ்களையுடைய நானா சக்தி மயமான திவ்விய பொற்றாமரைப் பூவின்மீது விசித்திர மான கட்டிவைக் கொண்டது. இந்தக் கட்டிலின்மீது பல்லாயிரம் சந்திரர்களை உருக்கி வார்த்தாற்போல் குளிர்ந்த தன்மையையுடைத்தான திருமேனியை உடைய னாய் கலியான குணங்கட்கு அந்தமில்லாமையினால் அனந்தன் என்ற திருநாமமுடையவனாய், எல்லாவித அடிமைத் தொழில் புரிபவர்க்கெல்லாம் உபமான நிலமா விருத்தலால் சேஷன் என்னும் திருநாமமுடையவனாகிய திருஅனந்தாழ்வானாகிய படுக்கையில் வெள்ளி மலையின் உச்சியில் பல்லாயிரம் பகலவன் உதித்தாற்போல் இருக்கும் ஆயிரம் பணாமுடி மண்டலமாகிய சோதி மண்டலத்தின் நடுவில் வீற்றிருப்பவன். அருள் தேவியான பெரிய பிராட்டி யார் இவனது வலப்பக்கத்திலும்,பொறைத்தேவியான பூமிப் பிராட்டியாரும், ஆனந்த தேவியான நீளப் பிராட்டியாரும் விசாலமானமானது. இங்குள்ள பொருள்கள் யாவும் சுத்த சத்துவத்தாலானவ. இங்குக் காலம் நடை பாடாது; காலை-மாலை, பகல்-இரவு, இன்று. நேற்று என்ற நிலைகள் இங்கு இல்ல். முன்-பின் என்ற நிலை உண்டு. வீடுபேறு அ-ைதற்கேற்ற உபாயங்களைக் கையாண்டு அவன் திருவருளைப் பெற்ற முமுட்சுகள்தாம் இந்த நீள் விசும்பினை ஆடைதல் முடியும். இவர்கள் இப்பூவுலகிற்குத் திரும்பி வருதல் இல்லை. பிரளய காலத்தில இவர் கட்கு அழிவு இல்லை.இறைவன் திருவுள்ளப்படி எந்த உருவத்தையும் இவர்கள் மேற்கொள்வர்.