பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 சடகோபன் செந்தமிழ் வைகுந்தமும் (8.2. 8) என்று இனங்காட்டி மகிழ்வர். திருவாய்மொழிப் பாசுரமொன்றில் இந்த ஆதிவார் வைகுந்த நாதனை அநுசந்திக்கின்றார். - தானோர் உருவே தனிவித்தாய் தன்னின் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்த் தானோர் பெருமீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும் வானோர் பெருமான் மாமாயன் வைகுக் தன்னம் பெருமானே. : -திருவாய் 1.5 : 4 (தான் - ஒருவனாகி நின்ற தான்; ஒர் உரு - ஓர் உருவ முடையவன்; தனி - தனித்த காரணன்; வித்து - உபாதான காரணம்; மூவர் - பிரமன், சிவன், இந்திரன்; பலர் - சேதனர்; மற்றும் - மானிடசாதி: மற்றும் விலங்கு பறவை; முற்றும்-எல்லாம்; தான். சங்கல்பத்துடன் கூடிய தான்; வானோர் - நித்திய சூரிகள்: மாமாயன் - ஆச்சரியமான செயல்களை யும் குணங்களையும் உடையவன்; வைகுந்தன் . பரமபதநாதன்! இப்பாசுரத்தில் ஆழங்கால் பாடுவோம். தானோர் பெருர்ே தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும் வானோர் பெருமான்: இதில் சமஷ்டி சிருஷ்டியும் (தொகுதியான படைப்பும்), தானோர் உருவே தனிவித்தாய் தன்னின் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்: இதில் வியஷ்டி சிருஷ்டியும் (வேறு வேறு படைப்புகளும்) பேசப் பெறுகின்றன. சாந்தோக்கிய உபநிடத வாக்கியத்தில் (6.2 : 1) சதேவ', 'ஏகமேவ. 'அத்விதியம்' என்ற மூன்று சொற்றொடர்கள் உள்ளன.