பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சடகோபன் செந்தமிழ் 1. திருவிருத்தம் : இஃது இயற்பாவில் ஐந்தாவதாக இடம் பெற்றுள்ளது. இந்நூலில் ஆழ்வார் தமது அன்பு மிகுதி முதலிய செய்திகளை எம்பெருமான் முன்னிலையில் விண்ணப்பம் செய்தலால் இஃது இத்திருநாமம் பெற்றது. வடமொழியிலுள்ள வ்ருத்தம்’ என்ற சொல் தமிழில் விருத்தம் எனத் திரிந்தது. பல பொருள்களையுடைய இச் சொல் இங்கு செய்தி என்னும் பொருளைப் பெற்றது. ஆழ்வார் தமது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெரு மானை நோக்கி 'தேவரீரை அநுபவித்தற்கு விரோதியான உடல் தொடர்பைப் போக்கியருள வேண்டும் என்று சம்சார சம்பந்த நீக்கத்தை விரும்பும் முகத்தால் இவ்விருள் தருமா ஞாலத்தில் தம் இருப்பு தமக்கு மிகவும் வெறுக்கத் தக்கதாக இருக்கும் செய்தியையும், எம்பெருமானுடைய நித்தியாது பவத்திலேயே தமக்குக் காதல் கிளர்ந்த செய்தியையும் சொல்லுகினறதாக அமைகின்றது, "திரு. என்ற சொல் வடமொழியில் பூர் என்பது போல தமிழில் மேன்மையுடைய எப்பொருள்கட்கும் சிறப்புச் சொல்லாகி அவற்றிற்குப் பெருமைப் பொருளைக் காட்டும். விருத்தம் என்னும் சொல் செய்தியைச் சொல்லுவதாயினும், சண்டுக் காரிய ஆகுபெயராய், செய்தியைக் கறும் நூலை உணர்த்து கின்றது. இப்பிரபந்தம் கட்டளைக் கலித்துறையில் அமைந்த 100 பாசுரங்களைக் கொண்டது; பாசுரங்கள் அந்தாதி தொடைத் கால் அமைந்தன. சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் தேவாரத் திருமுறை, பட்டினத்தடிகளின் பாடல் திருமுறை என்பவற்றின் கட்டளைத் துறையைத் திருவிருத்தம் என்று வழங்கும் மரபு இருத்தலின். அதுபோலவே இதுவும் திரு. 1. ஒரு செய்யுளின் இறுதி சொல், அசை, எழுத்து - அடுத்த செய்யுளின் சொல், அசை எழுத்தாகத் தொடங்குவது அந்தாதித் தொடை. ஆந்திழ்: இறுதி ஆதி - முதல்