பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் - - - - - - #63 பாசுரங்களில் 1, 2, 3, 6 எண்ணிட்டுள்ள பாசுரங்கள் நேரிசை யாசிரியப்பாக்கள்; 4, 5, 7 எண்ணிட்டுள்ளவை நிலை மண்டில ஆசிரியப்பாக்கள். இப்பிரபந்தமும் அந்தாதித் தொடையால் அமைந்தது. இயற்பாத் தொகுதியில் ஆறாவ தாக அடைவுபடுத்தப் பெற்றுள்ளது. இப்பிரபந்தத்தின் முதல் பாசுரம் இது. செக்கர்மா முகிலுடுத்து, மிக்க செஞ்சுடர்ப் பரிதிசூடி அஞ்சுடன் மதியம் பூண்டு புலசுடன் புனைந்த பவளச் செல்வாய் திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம் கடலோன் கைமிசைக் கண் வளர் வதுபோல் பீதக ஆடை முடிபூண் முதலா மேதகு பல்கலன் அணிந்து சோதி வாயவும் கண்ணவும் சிவப்பு மீதிட்டுப் பச்சை மேனி மிகப்ப கைப்பு கச்சுவினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர்முதலனைத்தோர் தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரை யுக்தித் தனிப்பெரு காயக! மூவுலகளந்த சேவடி யோயே, (செக்கர் - சிவந்த; முகில் - மேகம்; பரிதி - சூரியன் மதி - சந்திரன்; பல்சுடர் - உருக்கள்; கடலோன் . கடலரசன்; சோதி - அழகிய மேனி - திருமேனி: ஆசிரியப்பா. ஈற்றடியும் முதலடியும் ஒழிந்து இடை யடிகள் இரண்டும் பலவும் குறளடியானும் சிந்தடி யானும் வருவன இணைக்குறளாசிரியப்பா, எல்லா அடியும் முதல், நடு, இறுதியாக உச்சரிப்பினும் ஓசையும் பொருளும் பிழையாது வருவது அடிமறி மண்டில ஆசிரியப்பா,