பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió4 சடகோபன் செந்தமிழ் எறிகடல் - அலை எறிகின்ற; அரவு - அனந் தாழ்வான்; கிடந்த - பள்ளிகொண்டிருக்கும்: உந்தி - கொப்பூழ்: சேஅடி - அழகிய திருவடி) திருவிருத்தத்தின் முதற்பாசுரத்தில் அழுக்குடம்பு’ என்று தம் முடைய உடம்பின் தண்மையை (கீழ்மையைப்) பேசினார்; இந்தப் பிரபந்தத்தின் முதற் பாசுரத்தில் எம்பெருமானின் திருமேனியின் பேரெழிலில் ஈடுபட்டுப் பேசுகின்றார். அப்ராக்ருதமாய் ஒப்புயர்வற்றதான பகவானுடைய திவ்விய மங்கள விக்ரகத்திற்கு ப்ராக்ருதப் பொருள்களில் ஒன்றை உவமையாக எடுத்துக் கூறுவது, ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி - - -திருவாய் 3.1 : 1. iஒட்டுஉரைத்து - உதாரணமாகச் சொல்வி; புகழ்வு - துதிப்பது பெரும்பாலும் - மிகவும்: பட்டுரையாய் . பொருளற்றதாய், புற்கென்றே - சிறுமையாக) என்றவாறு அவத்யமாகத் தலைக்கட்டுவதல்லது வேறில்லை. ஆகையால் இல்பொருளுவமை (அதஉவமை)யால் விளக்கு கின்றார். உவமேயப் பொருள் ஒப்பற்றதாக இருக்கும்போது இப்படித்தான் விளக்க வேண்டிவரும். எம்பெருமான் திருவரையில் திருப்பீதாம்பரம் சாத்திக் கொண்டும், திருமுடியில் திருவபிடேகம் அணிந்து கொண்டும், இப்படியே மற்றும் பலபல திருவாபரணங்களைப் பூண்டு கொண்டும், செந்தாமரை போன்ற திருவாயும் திருக்கண் களும் விளங்கவும், பச்சையான திருமேனி நிறமானது மற்ற சோபைகளெல்லாவற்றையும் விடச் சிறப்பாக விளங்கவும். கடலிடைய்ே திருவனந்தாழ்வான் என்னும் திருவணையின்