பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சடகோபன் செந்தமிழ் பெருமானுக்கு இஃது ஒர் அரிய செயலா?’ என்று பேசு கின்றார் ஆழ்வார். வலியே என்பதில் உள்ள ஏகாரம் வவியல்ல என்பதைக் காட்டும். தாம்பால்ஆப் புண்டாலும் அத்தழும்பு தான் இனகப் பாம்பால் ஆப் புண்டுபா டுற்றாலும் சோம்யாது.இப் பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா!உன் தொல் உருவை யார் அறிவார்? சொல்லு (18) தாம்பு - கயிறு: ஆப்புண்டாலும் - கட்டியடிக்கப் பெற்றாலும்; பாம்பு - காளியன். பல் உரு - பலபல பிராணிகள், படர்வித்த விரிவாகப் படைத்த: வித்து - விதை), சம்சாரிகள் எம்பெருமானுக்குப் பலவகையான தீங்கு களை உண்டுபண்ணினாலும், அப்போதும் ஆருயிர்களிடம் . அவனது வாத்சல்யம் குறையாது காப்பாற்றுகின்றான் என் இன்ற பெருங் குணத்தில் ஈடுபட்டுப் பேசுகின்றார். தாம்பால் ஆப்புண்டது கண்ணிநுண் சிறுத் தாம்பினால் உரலில் பிணைத்து அடித்துப் பகவானைத் துன்புறுத்தினாள் யசோதை; அதுகூலர் அன்பின் மிகுதியால் செய்த செயல் இது, பாம்பால் ஆப்புண்டது காளியன் தன் வாலினால் கண்ணனை அழுந்தக் கட்டி அவன் திருமேனி தழும் பேறும்படி வருத்தத்தை உண்டு பண்ணியது. இது பிரதி கூலர் விரோதத்தால் செய்த செயல். முன்னதை விடப் பின்னது வலிது. அத்தழும்புதான் இளக' என்பதனால் இஃது அறியப்படும். இந்த இருசாரார் மாட்டும் நன்மையையே நாடி இருக்கும் எம்பெருமானின் சொரூபம் ஒருவராலும்,நிலை காண ஒண்ணாது.