பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சடகோபன் செந்தமிழ் கின்றார், தம் நெஞ்சில் வேதாந்த விழுப்பொருள்கள் நன்கு பதியும்படி திருவாய்மொழியை அருளிச் செய்ததை, மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள் கிற்கப் பாடியென் நெஞ்சுள் கிறுத்தினான் (9) என்று கூறி அதே கணத்தில்தான் அவருக்குக் கைங்கரியம் செய்யும் பேற்றினையே பயனாகக் கொண்டதையும் குறிப் பிடுகின்றார். (ஆ) கம்பநாடர் சடகோபரைப் பாராட்டிச் சடகோபர் அந்தாதி என்ற ஓர் இனிய நூலை இயற்றியுள்ளார். சேராதன வுளவோபெருஞ் செல்வர்க்கு வேதம் செப்பும் பேராயிரம்: திண்பெரும்பெயர் ஆயிரம்: பெய்துளவத் தாரார் முடி ஆயிரம்: குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆராஅமு தங்கவி ஆயிரம் அவ்வரியி னுக்கே (45) என்பது அதில் உள்ள ஒருபாடல் (இ) மணவாள மாமுனிகள் திருவாய்மொழிபற்றி

  • திருவாய்மொழி நூற்றந்தாதி’ என்ற நூலை அருளி திருவாய்மொழியைச் சிறப்பித்துள்ளார். இதில் 100 திருவாய் மொழிக்கும் 100 வெண்பாக்கள் அருளிப் போற்று கின்றார். அவற்றுள் ஒன்று திருவேங்கடத்தைச் சிறப்பிக்கும் 'உலகம் உண்ட பெருவாயா' (6. 1:ெ 10) என்ற திருவாய் மொழி பற்றியது, -

உலகுயமால் கின்ற உயர்வேங் கடத்தே அலர்மகளை முன்னிட்டு அவன்தன்- மலரடியே வன்சரணாய்ச் சேர்ந்த மகிழ்மாறன் தாளினையே உன்சரணாய் நெஞ்சமே உள் (60) என்ற வெண்பாவாகும்.