பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அகப்பொருள் தத்துவம் Liரம்பொருளுக்கும் ஆன்மாவிற்கும் ஒன்பது வகை யான தொடர்புகள்-உறவுமுறைகள்-ஏற்பட்டுள்ளன என்று வைணவ தத்துவம் கூறுகின்றது. இதை அறிந்து கொள்வதே சம்பந்த ஞானம் என்பது. இதை அறிந்து கொள்ளாததால் தான் ஆன்மாக்கள் நெடுங்காலமாக இறைவனை விட்டுப் பிரிந்து பிறவிக் கடலில் ஆழ்ந்து துன்புறுகின்றன. சர்வே சுவரனையும் நம்மையும் பொருத்திவைப்பது இச்சம்பந்த ஞானமேயாகும். சம்பந்த ஞானம் உடையவர்களிடத்தில் சர்வேசுவரன் விரும்பிகடைவன். ஆதலால் சம்பந்த ஞானம் சசுவரனையும் விருப்புறுத்துவதற்கு உரியதாகின்றது. இந்த ஞானமில்லாத பிறவி பயனற்ற பிறவியாகின்றது. இக்கருத்து பற்றியே திருமழிசைபிரானும், அன்றுகான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்' என்றார், அதாவது, எனக்கு சம்பந்த ஞானம் பிறவாதிருந்த போது பல திவ்வியதேசங்களில் நிற்றல், இருத்தல், கிடத்தல் களைச் செய்து கொண்டிருந்தான்; எனக்கு அதில் ருசி பிறப்பிக்கைக்காக இவ்வாறு செய்து கொண்டிருந்தான். (இது அவனுக்குச் சாதனம்): எனக்கு ருசி பிறந்து சம்பந்த 8. திருச்சந் , 64