பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சடகோபன் செந்தமிழ் ஞானம் ஏற்பட்ட பிறகு திவ்விய தேசங்களில் செய்து கொண் டிருந்த செயல்களைத் தவிர்த்து, அவ்விருப்புகளையெல்லாம் என் நெஞ்சில் செய்தருளுகின்றான் (இது அவனுக்குச் சாத்தியம் - பலன்)' என்கின்றார். நம்மாழ்வாரும் இந்தச் சம்பந்தஞானத்தின் பெருமை யைக் குறித்து, . - அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு. ஈசன் அடங்கெழில் அஃது என்று அடங்குக உள்ளே. . --திருவாய் 1.2 : 7 (அடங்குஎழில் முற்றிலும் அடங்கியதான; சம்பத்து - விபூதி: அடங்க அஃதெல்லாம், ஈசனது - எம்பெரு மானுடைய எழில் - சம்பத்து; உள்ளே அந்த பகவத விபூதிக்குள்ளே; அடங்குக - சொருகிப் போவது; - g’ என்ற பாசுரத்தில் விளக்குகின்றார். எம்பெருமானுடைய கட்டடங்க நன்றான செல்வத்தை எல்லாம் கண்டு நமக்கு வகுத்த சுவாமியினுடைய செல்வம் இவையெல்லாம் என்று நினைந்து அவ்விபூதிக்குள்ளே தானும் ஒருவனாகச் சேரக் கடவன். இதனால் எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள உறவை உணரமுடியும்; உணரவே கூச்சம் குலையும் என்பது இதன் தேர்ந்த கருத்து. அந்த விபூதியினின்றும் வெளிப் பட்டால் விநாசமே உண்டாகும்; அதனுட்பட்டுவிட்டால் கூசவேண்டிய அவசியமே இல்லை. சம்பந்த உணர்ச்சி 'உண்டானால் அதுவே போதும். நிருபாதிக பிதாவாகிய எம்பெருமானுடைய "உன்றன்னோடு, உறவேல் நமக்கு இங்கொழிக்க ஒழியாது (திருப். 28) என்னும்படியான உறவின் உறுதியை உற்று நோக்கினால் இக்கருத்து தெளி வாகும். உடைமை உடையவன் என்னும் சம்பந்த ஞானம்