பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சடகோடன் செந்தமிழ் மந்திரமும் குறிப்பிடுவதாக நம் முன்னோர்கள் உரைத்துப் போயினர். எட்டு எழுத்து மந்திரம் “ஓம் கமோ நாராயணாய என்பது. இது மூன்று பதமாயும் (ஒம்+நமோ+நாராயணாயர் எட்டு எழுத்துகளாயும் (ஒம்-ஒர் எழுத்து நம-இரண்டு எழுத்து நாராயணாய-ஐந்து எழுத்து) இருக்கும். பிரணவம் (ஒம்) என்ற பதம் அ, உ, ம என்று மூன்று எழுத்து, களாய்ப் பிரியும். இங்ங்ணம் பிரிந்த நிலையில் மூன்று பொருள் களைத் தெரிவிக்கும். சேர்ந்திருக்கும் நிலையில் ஒரே பதமாய் ஒரே பொருளைத் தெரிவிக்கும். இந்த அடிப்படை யில் சம்பந்தஞானத்தை நோக்குவோம். 1. அகாரத்தினால், {i) தந்தை-தனயன் என்ற உறவும், (i) இரட்சிக்கப்படுபவன் -இரட்சிப்பவன் என்ற உறவும் அறியக் கிடக்கின்றன. 2. ஆய' என்ற மறைந்து கிடக்கும் நான்காம் வேற்றுமை உருபால் (லுப்த சதுர்த்தியால்) (iii) அடிமை-அடிம்ை கொள்பவன் (சேஷ-சேவி பாவனை) என்ற உறவு சொல்லப் பெறுகின்றது. 3. உகாரத்தினால், (iv) நாயக-காயகி (தலைவன்-தலைவி உறவு) நவிலப் பெறுகின்றது. 4. மகாரத்தினால், (w) அறிபவன்-அறியப்படும் பொருள் (ஞாத்ரு.ளுேய சம்பந்தம்) என்ற உற்வு உரைக்கப் பெறுகின்றது. 5. நமஸ்ஸாலே, (wi) ஸ்வஸ்சாமி (சொத்து- சொத் துக்குரியவன்) என்ற சம்பந்தம் (ஸ்வம்-சொத்து, ஸ்வாமி-சொத்துக் குரியவன்) சொல்லப் பெறுகின்றது. ... -- -